பக்கம் எண் :

திருநாளைப்போவார்222நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

சிவமயம்.

திருச்சிற்றம்பலம்.

நடராஜப்பத்து.

_____

மண்ணாதி பூதமொடு விண்ணாதிஅண்டம்நீ மறைநான்கின் அடிமுடியும்நீ
       மதியும்நீ ரவியும்நீ புனலும்நீ அனலும்நீ மண்டல மிரண்டேழும்நீ
பெண்ணும்நீ ஆணும்நீ பல்லுயிர்க் குயிரும்நீ பிறவும்நீ வொருவநீயே
       பேதாதி பேதம்நீ பாதாதி கேசம்நீ பெற்றதாய் தந்தைநீயே
பொன்னும்நீ பொருளும்நீ யிருளும்நீ ஒளியும்நீ போதிக்க வந்தகுருநீ
       புகழொணா கிரகங்க ளொன்பதும் நீயிந்த புவனங்கள் பெற்றவனும்நீ
எண்ணரிய ஜீவகோ டிகளீன்ற வப்பனே என்குறைக ளார்க்குரைப்பேன்
       ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே. (1)

மானாட மழுவாட மதியாடப் புனலாட மங்கைசிவ காமியாட
       மாலாட நூலாட மறையாட திரையாட மறைதந்த பிரம்மனாட
கோனாட வானுலகு கூட்டமெல் லாமாட குஞ்சர முகத்தனாட
       குண்டல மிரண்டாட தண்டைபுனை யுடையாட குழந்தை முருகேசனாட
ஞானசம் பந்தரொடு யிந்திரர் பதினெட்டு மினியட்ட பாலகருமாட
       நரைதும்பை யறுகாட நந்திவா கனமாட நாட்டியப் பெண்களாட
வினையோட உனைப்பாட யெனைநாடி யிதுவேளை விருதோடி ஆடிவருவாய்
       ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்றதில்லைவாழ்நடராஜனே. (2)

கடலென்ற புவிமீதில் அலையென்ற வுருக்கொண்டு கனவென்றவாழ் வைநம்பி
      காற்றென்ற மூவாசை மாருதச் சூழலிலே கட்டுண்டு நித்தநித்தம்