பக்கம் எண் :

திருநாளைப்போவார்29நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

கடாட்சமாகக்குகன் கணபதி யுடன்மன்ன
     காதலாலெவருந்துன்ன போதயனுசிதமென்ன (தடாக)

சரணங்கள்.

கந்தமுலாவிய தாமரைப்பூத்துக் கதிக்க-மிகுத்திடுஞ்சேர்

கண்டை வரா லுளுவைக் கணமங்கு குதிக்க
சுந்தர மிகுந்த பறவைகள் முழுதிலுஞ் சூழ
சோமசூரியர்கள் சுகமுடன் வந்து தாழ
விந்தையுடனேபல வேள்வி யந்தணர்செய்ய
விளங்குஞ் சங்கினமுய்ய களங்கமில்லாமற்றுய்ய (தடாக)

ஓதிடுவானதியானதுதான்மிக நாண-ஆம்பல்மலர்ந்து

ஓதிமமுங்கு ருகின்குலமும் எதிர் காண
சோதிமருவுந்தேவ-தாருநிழலுங் கொடுக்க
சுரபிக்கடம்பைமானும் சூழ்ந்து அங்கே அடுக்க
மாதர்மலர்க்குழலார்-மகிழ்ந்து அங்கேநீ ராட
வல்வினைகளும்விட்டோட-வல்லவர்களுங்கொண்டாட (தடாக)

வாசனை தங்கியமல்லிகை முல்லையின் சாலை-சந்தனச்சாலை

வாழைபலாக்கமுகுங்கனமாமலர்ச் சோலை
ஆசையாகமயி-லழகுறவே நடிக்க
அருமறைப்பூசுரர்க-ளனுதினமும் படிக்க
தேசுலாவுந்திவ்யத்-தீர்த்தமாகுமென்றெந்த
திசைதேவர்களுமுந்த இசைநந்தனார் தம்சொந்தத் (தடாக)

நாளைப்போவார்நிஷ்டைகலைந்துபார்த்தார்
குளம்வெட்டியிருக்கவுளமகிழ்ந்தார்
பிள்ளையாரிருக்கக்கண்களிற்காணார்