|
அனுபல்லவி.
சிதம்பரம் போவேன்
தேறித்தெளிவேன்
பார்புகழ் தில்லைப் பதங்களைப்
பாடிச் (சிதம்பரம்)
சரணங்கள்.
ஒருதரஞ் சொன்னா லுலகங்க
ளுய்யும்
இருவினைப் பயன் இல்லை எந்நாளும்
(சிதம்பரம்)
பாதி ராத்திரியில் பன்மறை
யோதி
வேதியர் போற்றி விளங்கிய தில்லைச்
(சிதம்பரம்)
திறமொன் றறியாத்
தீங்குகள் செய்யும்
பறையனாய்ப் பிறந்த பாவங்கள் தொலையச்
(சிதம்பரம்)
வசனம்.
நாளைப்போவார்
தமக்கு தரிசனங்கிடைக்க வேண்டியதற்காகக்
கற்பகப்பிள்ளையாரை
வேண்டுதல்.
விருத்தம்.
காலனுடல் பூமிபடச்
சாய்த்திடுவான் செங்கமலக் காலைத் தூக்கி
கோலமுட னடனமிடுந் தனிமன்றுள் நாயகனே குற்றந்
தீரப்
பாலிக்கும் படியெனக்குன்
னருள்புரிவா யென்றுநற் பழங்கள் வைத்து
மேலைக்கோ புரவாயிற் கற்பகத்தைச்
சிந்தையுள்ளே வேண்டு வாரே.
வசனம்.
நந்தனார் சேரியிலுள்ள
புலையர்களை அழைத்துக்கொண்டு சிதம்பரம்போய்த்
தரிசனம் பண்ணவேண்டுமென்று ஆசையுற்று பக்தி
மார்க்கங்களைச் சொல்லுகின்றார்.
|