பக்கம் எண் :

திருநாளைப்போவார்36நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

நந்தனார் - பூசத்திருநாளில் போய்வருவோமென்றார்
புலையர்
- பேசத்தெரியாது பேயாநீபோவென்றார்
நந்தனார்
- அழுதுமுறையிட்டாலம்பலத்தேகேட்குமென்றார்
புலையர்
- உழுதுபயிரிட்டா லுள்ளபடிவிளையுமென்றார்
நந்தனார்
- சித்தமெல்லாமம்பலத்தே சென்றுதேடுதென்றார்
புலையர்
- பக்தியெல்லாம்வேறுபட்டுபறந்துபோச்சுதென்றார்
நந்தனார்
- குற்றாலத்தீசனைக் கூறுவீரென்றார்
புலையர் -
கைத்தாளம்போட்டுக் கதறுவீரென்றார்
நந்தனார்
- தாண்டவராயனே தகுந்தெய்வமென்றார்
புலையர்
- தூண்டிவீரப்பனே தொழுந்தெய்வமென்றார்
நந்தனார்
- இஷ்டப்படிநடக்கு மீசனைத் துதியென்றார்
புலையர்
- கஷ்டப்படமாட்டோம் கசக்காதேபோவென்றார்
நந்தனார்
- கொண்டாடிதெய்வத்தைக் கொள்ளுவீரென்றார்
புலையர்
- பொண்டாட்டித்தெய்வமே பெருந்தெய்வமென்றார்
நந்தனார்
- நலத்தைக்கொடுக்கவந்த நற்குருவென்றார்
புலையர்
- குலத்தைக்கெடுக்கவந்த கோடாலிக்காம்பென்றார்
நந்தனார்
- பலவழக்கம்நானறிவேன் பறையரேயென்றார்
புலையர்
- குலவழக்கமறியாத குருடாபோவென்றார்
நந்தனார்
- நாக்கறுப்பேன்சிவனை நவிலுவீரென்றார்
புலையர்
- மூக்கறுப்பான்கதையை மொழிந்தீரேயென்றார்.

__________

வசனம்.

நந்தனார் பெரியோருடை அனுஷ்டானத்தைப் புலையர்களுக்குச் சொல்லுகிறார்: