(க-து.)
எவற்றிற்கும்
அவற்றைச் சிறப்பிக்க ஒரு பொருள் வேண்டும்.
35.
மூடர்களில் உயர்வு தாழ்வு
பெண்புத்தி
கேட்கின்ற மூடரும், தந்தைதாய்
பிழைபுறம் சொலும்மூ டரும்,
பெரியோர்கள் சபையிலே முகடேறி வந்தது
பிதற்றிடும் பெருமூ டரும்,
பண்புற்ற சுற்றம் சிரிக்கவே யிழிவான
பழிதொழில்செய் திடுமூ டரும்,
பற்றற்ற பேர்க்குமுன் பிணைநின்று பின்புபோய்ப்
பரிதவித் திடுமூ டரும்,
கண்கெட்ட மாடென்ன ஓடியிர வலர்மீது
காய்ந்துவீழ்ந் திடுமூ டரும்,
கற்றறி விலாதமுழு மூடருக் கிவரெலாம்
கால்மூடர் அரைமூ டர்காண்
அண்கற்ற நாவலர்க் காகவே தூதுபோம்
ஐயனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
(இ-ள்.)
அண்கற்ற
நாவலர்க்காகவே தூதுபோம் ஐயனே -
அடுத்திருக்க அறிந்த சுந்தரருக்காகப் (பரவையாரிடம்) தூதுசென்ற
தலைவனே!, அருமை ......... தேவனே!, பெண்புத்தி கேட்கின்ற மூடரும் -
பெண்ணின் அறிவுரையைக் கேட்டு நடக்கும் பேதையரும், தந்தைதாய்
பிழைபுறம் சொலும் மூடரும் பெற்றோர் குற்றத்தை வெளியிடும்
பேதையரும், பெரியோர்கள் சபையிலே முகடுஏறி வந்தது பிதற்றிடும்
பெருமூடரும் - சான்றோர் வீற்றிருக்கும் அவைக்களத்திலே மேடைமீது
நின்று (வாய்க்கு) வந்ததை உளரும் பெரும் பேதையரும், பண்புஉற்ற
சுற்றம் சிரிக்க இழிவான பழிதொழில் செய்திடும் மூடரும் -
|