(இ-ள்.)
அரக்கு இதழ் குமுதம் வாய் உமைநேசனே - சிவந்த
இதழும் செவ்வல்லிபோன்ற வாயும் உடைய உமையம்மையார் காதலனே!,
எளியர் அமுதனே - மெலிந்தவர்க்கு அமுதமானவனே!, அருமை .........
தேவனே!, புவி மீதில் இரப்பவன் ஈனன் - உலகத்திற் பிச்சையெடுப்பவன்
இழிந்தவன், அவனுக்கு இல்லையென்னும் அவன் அவனில் ஈனன் -
அவ்வாறு இரப்பவனுக்கு (வைத்துக்கொண்டு) இல்லையென்பவன்
அவனைவிட இழிந்தவன் : ஈகின்ற பேர் தமை ஈயாமலே தடுத்திடும்
மூடன் அவனில் ஈனன் - கொடுப்போரைக் கொடாமலே தடுத்துவிடும்
அறிவிலி ஈயாதவனிலும் இழிந்தவன்! உரைக்கின்ற பேச்சில் பலன் உண்டு
எனக்காட்டி உதவிடான் அவனில் ஈனன் - சொல்லும் சொல்லிலே
நன்மையுண்டு என்று நம்புவித்துப் பிறகு கொடாதவன் அவனினும்
இழிந்தவன், உதவவே வாக்கு உரைத்து இல்லையென்றே சொலும்
உலுத்தனோ அவனில் ஈனன் - கொடுப்பதாகவே உறுதிமொழி கூறிப்பிறகு
இல்லையென்றே கூறிவிடும் கஞ்சத்தனமுள்ளவனோ எனின் அவனினும்
இழிந்தவன், பரக்கின்ற யாசகர்க்கு ஆசை வார்த்தைகள் சொலி - எங்கும்
பரவியிருக்கும் இரவலர்க்கு (நம்பிக்கை யுண்டாகும்படி) ஆசைமொழிகள்
கூறி, பலகால் அலைந்துநிற்கப் பண்ணியே - பலதடவை உழன்று திரியும்படி
செய்துவிட்ட பிறகே, இல்லையென்றிடு கொடிய பாவியே பாரில்
எல்லோர்க்கும் ஈனன் - இல்லையென்று ஏமாற்றிவிடும் கொடிய பாவியே
உலகில் யாவரினும் இழிந்தவன்.
(வி-ரை.)
‘ஏற்பது இகழ்ச்சி', ‘இயல்வது கரவேல்’ ‘ஈவது விலக்கேல்'
என்பவை இங்கு உணரத்தக்கவை. அரக்கு - சிவப்பு நிறம்.
(க-து.)
இரப்பதைவிட இல்லையென்பது இழிவு; அதனினும் ஈவதை
விலக்குதல் இழிவு; அதனினும் பேச்சிலே பயனுண்டென நம்பும்படி சொல்லி
ஏமாற்றுவ்து இழிவு; நாளை வா என்று வந்தபின் இல்லையெனல் அதனினும்
இழிவு; அதனினும் பலமுறை அலைவித்து இல்லையெனல் இழிவு.
|