வேண்டத் தகுவது
அற்றென்பார் ‘பொய்யாத ....... வேண்டுமோ!' என்றார்.
இவ்வாறே பிறவற்றிற்கும் உரைத்துக்கொள்க. நையாத காமம் - குறையாத
ஆசை. சோண + அசலம். சோணாசலம், நெருப்பு மலை.
திருவண்ணாமலையின் புராணம் இவ்வாறு கூறுவகை உணர்க. தில்லை
மரங்கள் நிறைந்த இடமான தில்லைவனம் ‘தில்லை' என மருவி வழங்கியது.
(க-து.) நன்னெறியில்
நிற்போர் வேறு அறங்கள் செய்ய
வேண்டியதில்லை.
59.
அரியர்
பதின்மரில் ஒருத்தர்சபை மெச்சிடப் பேசுவோர்!
பாடுவோர் நூற்றில் ஒருவர்!
பார்மீதில் ஆயிரத் தொருவர்விதி தப்பாது
பாடிப்ர சங்க மிடுவோர்!
இதனருமை அறிகுவோர் பதினா யிரத்தொருவர்!
இதையறிந் திதயம் மகிழ்வாய்
ஈகின்ற பேர்புவியி லேஅருமை யாகவே
இலக்கத்தி லேயொ ருவராம்!
துதிபெருக வரும்மூன்று காலமும் அறிந்தமெய்த்
தூயர்கோ டியில்ஒ ருவர் ஆம்.
தொல்லுலகு புகழ்காசி யேகாம் பரம்கைலை
சூழும்அவி நாசி பேரூர்
அதிகமுள வெண்காடு செங்காடு காளத்தி
அத்தனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே! |
(இ-ள்.)
தொல் உலகு
புகழ் - பழைமையான உலகம் போற்றுகிற,
காசி ஏகாம்பரம் கைலைசூழும் அவிநாசி பேரூர் அதிகம்உள வெண்காடு
செங்காடு காளத்தி அத்தனே - காசியும் காஞ்சியும் கயிலையும் (அடியர்)
சூழும் |