உரப்பார்க்கு நலம்புரியுந் தண்டலையா ரேசொன்னேன் ஒருமை யாக இரப்பார்க்கு வெண்சோறு பஞ்சமுண்டோ ஒருகாலும் இல்லை தானே. 54 கொடுங்கோன்மை படுங்கோலம் அறியாமல் தண்டலையார் திருப்பணிக்கும் பங்கஞ் செய்வார் நெடுங்கோளுத் தண்டமுமாய் வீணார வீணனைப்போல் நீதி செய்வார் கெடுங்கோப மல்லாமல் விளைவுண்டோ மழையுண்டோ கேள்வி யுண்டோ கொடுங்கோல்மன் னவன்நாட்டிற் கடும்புலிவா ழுங்காடு குணம்என் பாரே. 55 தீமைக்குத் தீமை நன்மைக்கு நன்மை உள்ளவரைக் கெடுத்தோரும் உதவியற்று வாழ்ந்தோரும் உரைபெற் றோருந் தள்ளிவழக் குரைத்தோரும் சற்குருவைப் பழித்தோரும் சாய்ந்தே போவார் |