(தொ-ரை.)
செய்யிலே வளம் தழைத்த தண்டலையார் வளநாட்டில்
- கழனியிலே நெல் முதலியவற்றின் வளம் மிகுந்த தண்டலையாரின் வளம்
பொருந்திய நாட்டினில்; மையிலே தோய்ந்த விழி வஞ்சியரைச் சேர்ந்தவர்க்கு
மறுமையில்லை - மை தீட்டிய கண்களையுடைய பொதுமகளிரைச்
சார்ந்தவர்களுக்கு மறுமையில் நன்மையில்லை, மெய்யிலே பிணியும் உண்டாம்
- (இம்மையிலும்) உடலில் நோய்கள் உண்டாகும், கைப்பொருளும் கேடு ஆகி
விழலர் ஆவார் - கையில் உள்ள பொருளையும் இழந்து (பிறர்க்குப்) பயனற்ற
வரும் ஆவார்; தெளிந்தது அன்றோ - இது தெளிவானது தானே?, கையிலே
புண் இருக்கக் கண்ணாடி பார்ப்பது என்ன கருமம் - கையினிற் புண்
இருக்கையில் (அதை நேரே பாராமற்) கண்ணாடியிலே பார்ப்பது என்னசெயல்?
(வி-ரை.)
பொதுமகளிரை
விழைவோரின் இல்லறம் கெடும்.
ஆகையாலே, அவர்கள் கைப்பொருளும் கேடாகி விழலர் ஆவது கைப்புண்
போல வெளிப்படையாகத் தெரிவதால்,
‘கைப்புண் இருக்கக் கண்ணாடி
பார்ப்பது என்ன கருமம் தானே?'
என்றார். ‘கைப்புண்ணுக்குக்
கண்ணாடி
வேண்டுமா?' என்பது
பழமொழி.
87.
பனையடியிலே பால் குடித்தால்? காலம்அறி
தண்டலையார் வளநாட்டிற் கொலைகளவு கள்ளே காமம் சாலவரும் குருநிந்தை செய்பவர்பால்
மேவிஅறந் தனைச்செய் தற்கும் சீலமுடை யோர்நினையார்! பனையடியி லேயிருந்து
தெளிந்த ஆவின் பாலினையே குடித்தாலும் கள்ளென்பார்! தள்ளென்பார்! பள்ளென்
பாரே. |
(தொ-ரை.)
காலம்
அறி தண்டலையார் வளநாட்டில் - காலம்
அறிந்த தண்டலையாரின் வளநாட்டிலே, கொலை
|