பக்கம் எண் :

101

     2. கடுந் தேட்டுக் கண்ணைக் கெடுக்கும்

தண்டலையா ரடிபணிந்து தவம் தானம்
     உபகாரம் தருமம் செய்து
கொண்டபொருள் விலைவாசி காணிதே
     டிக்கோடி கொடுப்ப தல்லால்
வண்டருமாய் ஒன்றுபத்து விலைகூறி
     அநியாய வட்டி வாங்கிக்
கண்டவர்தம் கடுந்தேட்டுக் கண்ணை அறக்
     கெடுக்குமிது கருமந் தானே.


      (தொ-ரை.) தண்டலையார் அடிபணிந்து தவம் தானம் உபகாரம்
தருமம் செய்து கொண்ட பொருள் - தண்டலையாரின் திருவடியைப் பணிந்து
தவமும் தானமும் உதவியும் பிற அறமும் புரிந்து தேடிய பொருள், விலைவாசி
காணி கோடி தேடிக்கொடுப்பது அல்லால் - விலைவாசியையும் நிலபுலனையும்
கோடியெனத் தேடிக் கொடுக்குமே யல்லாமல், வண்டருமாய் ஒன்று பத்து
விலைகூறி - தீயவராய் ஒன்றுக்குப் பத்தாக விலை சொல்லி, அநியாய வட்டி
வாங்கிக் கண்டவர்தம் கடுந்தேட்டு - ஒழுங்கற்ற முறையிலே வட்டியை
வாங்கிச் சேர்ப்பவருடைய சிக்கனமான பொருளீட்டம், கண்ணை
அறக்கெடுக்கும் - வாழ்க்கையை முழுதும் கெடுக்கும், இது கருமந்தான் -
இதுதான் உலகில் நடப்பது.

      (வி-ரை.) விலைவாசி - விலையிலே உயர்வு தாழ்வு. வாசி :
கொடுக்கல் வாங்கல் எனினும் ஆம். கண் : ஆகு பெயராக வாழ்க்கை
நெறியைக் குறிக்கும்.
‘கடுந்தேட்டுக் கண்ணைக் கெடுக்கும்' என்பது
பழமொழி.

 

       3. புரட்டுச் செயல்

‘இதுகருமம் : இதனாலே இதை முடிப்பாய்!'
     எனத்தொழிலை யெண்ணிச் செய்தால்
அதுகருமம் பாராமல் திருடியும் அள்
     ளியும் புரட்டாய் அலைவ தெல்லாம்