மதியணியும் தண்டலையார்
வளநாட்டில் நீராடும் மாதர் தங்கள் முதுகினைத்தேய் எனச் சொன்னால் முலைமீது
கையிட்ட முறைமை தானே. |
(தொ-ரை.)
மதி
அணியும் தண்டலையார் வளநாட்டில் - பிறைமுடித்த
தண்டலையாரின் வளம் பொருந்திய நாட்டினில்,இது கருமம் : இதனாலே
இதை முடிப்பாய் எனத் தொழிலை எண்ணிச் செய்தால் - ‘இது நின் அலுவல்;
இவ் வழியே இதனைச் செய்திடு' என்று ஓர் அலுவலை நினைத்து ஏவினால்,
அது கருமம் பாராமல் திருடியும் அள்ளியும் புரட்டாய் அலைவது எல்லாம் -
அந்த அலுவலைச் சிந்தியாமல், மறைத்தும் எடுத்தும் மாறுபாடு செய்து
திரிவது முற்றும், நீராடும் மாதர் தங்கள் முதுகினைத் தேய் எனச்
சொன்னால் - நீரிற் குளிக்கும் பெண்கள் தங்கள் முதுகைத் தேய்க்கச்
சொன்னால், முலைமீது கையிட்ட முறைமைதானே.
(வி-ரை.)
புரட்டரிடத்திலே
ஒரு தொழிலைக் கொடுத்தால் அதைப்
பலவகையினுங் கெடுத்துத் தங்கள் நலத்தையே நாடிக்கொள்வர். 4.
ஊர்க்குருவிதான் உயரப் பறந்தாலும் . . . பார்க்குள்
அறிவிருந்தாலும் படித்தாலும் கேட்டாலும் பணிந்து வேத மார்க்கமுடன் நடந்தாலும்
சிறியவர்க்குப் பெரியவர்தம் மகிமை உண்டோ? ஆர்க்கும்அருங் கதியுதவும் தண்டலையா
ரே! சொன்னேன்! ஆகாயத்தில் ஊர்க்குருவி தானுயரப் பறந்தாலும் பருந்தாகா
துண்மை தானே. |
(தொ-ரை.)
ஆர்க்கும்
அருங்கதி யுதவும் தண்டலையாரே -
எல்லோருக்கும் நல்ல நிலையை அருளும் தண்டலை
|