யாரே!, ஊர்க்குருவி
ஆகாயத்தில் உயரப் பறந்தாலும் பருந்து ஆகாது -
ஊர்க்குருவி வானத்தில் உயரமான தொலைவிற் பறந்தாலும் பருந்தின்
மதிப்பை அடைய முடியாது, உண்மை தானே - இஃது உண்மையே ஆகும்;
(ஆகையால்), அறிவு இருந்தாலும் படித்தாலும் கேட்டாலும் பணிந்து வேத
மார்க்கமுடன் நடந்தாலும் - நுண்ணறிவிருப்பினும் கற்பினும் பெரியோர்
சொற்பொழிவைக் கேட்பினும் அடங்கி மறை நெறியே ஒழுகினும், பார்க்குள்
சிறியவர்க்குப் பெரியவர் தம் மகிமை உண்டோ - உலகிலே கீழ்மக்களுக்குச்
சான்றோரின் சிறப்பு உண்டாகுமோ?
(வி-ரை.)
‘உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது'
என்பது
பழமொழி. ‘சங்கையறப் படித்தாலும் கேட்டாலும் பிறர்க்குறுதிதனைச்
சொன்னாலும் - அங்கணுலகிற் சிறியோர் தாம் அடங்கி நடந்து
கதியடையமாட்டார் என்றார்' முன்னே (14) : இச்செய்யுளில் அவ்வாறு
நடப்பினும் மதிப்புப்பெறார் என்கிறார். 5.
இல்லது வாராது; நமக்கு உள்ளது போகாது வல்லமையால்
முடிவதுண்டோ? தலைகீழாய் நின்றாலும் வருவ துண்டோ? அல்லதுதான் அவன் செயலே
அல்லாமல் தன்செயலால் ஆவதுண்டோ? புல்லறிவால் மயங்காமல், தண்டலையார்
அடிபணிந்து, புத்தி உண்டாய், இல்லது வாராது! நமக் குள்ளதுபோ காதெனவே
இருக்க லாமே. |
(தொ-ரை.)
வல்லமையால்
முடிவது உண்டோ - (நம்) ஆற்றலாலே
ஏதாவது முடியுமா?, தலைகீழாய் நின்றாலும் வருவது உண்டோ - எவ்வளவு
முயன்றாலும் (நமக்கு வாராதது) வருமா?, அல்லது - மேலும், அவன் செயலே
அல்லாமல் தன் செயலால் ஆவது உண்டோ - இறைவன் ஆணைப்படியே
நடக்குமன்றி ஒருவன் முயற்சி
|