யால் மட்டும் ஏதாவது
முற்றுறுமா? (ஆகையால்), புல்லறிவால் மயங்காமல் -
சிற்றறிவினாலே சிந்தை கலங்காமல், தண்டலையார் அடிபணிந்து -
தண்டலையாரின் திருவடிகளை வணங்கி, புத்தி உண்டாய் - அறிவுபெற்று,
நமக்கு இல்லது வாராது - நமக்கு (ஊழினாலே) வரத்தகாதது கிடையாது,
உள்ளது போகாது - (ஊழினாலே) வரக்கூடியது வீணாகாது, என இருக்கலாம்
- என்று (முயற்சியுடன் மட்டும்) இருத்தல் நலம்.
(வி-ரை.)
எனவே
: ஏ : அசை, இருக்கலாமே : ஏ : அசை. ‘ஊழிற்
பெருவலி யாவுள? மற்றொன்று - சூழினும் தான்முந் துறும்' என்ற வள்ளுவரே,
‘ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர்' எனக்
கூறுவதால்,இச்செய்யுள் முயற்சியைக் கூடாதென்று கூறியதாகக் கொள்ளலாகாது.
‘முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்' என்பதனாலே பயனை எதிர்பாராமல்
முயற்சியைச் செய்க என்பதே கருத்தாகக் கொள்ளல் வேண்டும்.
‘இல்லாதது
வராது உள்ளது போகாது' என்பது
கருத்து.
6.
குங்குமம் சுமந்த கழுதை பேருரைகண்
டறியாது தலைச்சுமைஏ டுகள்சுமந்து பிதற்று வோனும், போரில்நடந் தறியாது பதினெட்டா
யுதம்சுமந்த புல்லி யோனும் ஆரணிதண் டலைநாதர் அகமகிழாப் பொருள்சுமந்த
அறிவி லோனும் காரியமொன் றறியாக்குங் குமம் சுமந்த கழுதைக்கொப் பாவர்
தாமே. |
(தொ-ரை.)
ஆர்
அணி தண்டலைநாதர் அகம்மகிழாப் பொருள்
சுமந்த அறிவு இலோனும் - ஆத்திமாலை தரித்த தண்டலைப் பெருமானார்
மனம் விரும்பாத பொருள்களைச் சுமந்த மூடனும், தலைச் சுமை ஏடுகள் பேர்
உரை கண்டறியாது சுமந்து பிதற்றுவோனும் - தலைக்குச் சுமையாக நூல்களை
அவற்றின் சிறந்த பொருளை அறியாமல் சுமந்து குளறுபடி செய்பவனும்,
போரில் நடந்து அறியாது
|