பக்கம் எண் :

105

பதினெட்டு ஆயுதம் சுமந்த புல்லியோனும் - போருக்குச் சென்ற பழக்கமின்றி
எல்லாப் படைக்கலங்களையும் சுமந்த இழிஞனும், காரியம் ஒன்று அறியாக்
குங்குமம் சுமந்த கழுதைக்கு ஒப்பாவர் - (எதனைச் சுமக்கிறோம் என்ற) தன்
அலுவல் ஒன்றையும் உணராமற் குங்குமத்தைச் சுமந்த கழுதைக்குச் சமம்
ஆவர்.

      (வி-ரை.) தண்டலைநாதர் மகிழாப் பொருள்கள் சைவச் சின்னம்
அல்லாதவை.
‘குங்குமஞ் சுமந்த கழுதை' என்பது பழமொழி.

      "புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள்தெரியார்
      உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும் - மற்றவற்றைப்
      போற்றும் புலவரும் வேறே! பொருள்தெரிந்து
      தேற்றும் புலவரும் வேறு"

                                      - நாலடியார்.

 

     7. பொற்பூவில் வாசனை

கற்பூர வல்லியொரு பாகர்செழுந்
     தண்டலையார் கடலேழ் சூழ்ந்த
நற்பூமி தனிற்பிறந்தோர் எல்லோரும்
     மக்களென நாட்ட லாமோ?
அற்பூரும் பண்புடையார் நற்குணமும்
     பண்பிலார் அழகும் காணின்
பொற்பூவில் வாசனையும் புன்முருக்கம்
     பூவுமெனப் புகலல் ஆமே.

      (தொ-ரை.) கற்பூரவல்லி ஒருபாகர் செழுந்தண்டலையார் கடல் ஏழ்
சூழ்ந்த நற்பூமிதனில் - கற்பூரவல்லியான உமையம்மையாரை ஒரு பங்கிலே
கொண்ட இறைவராகிய வளமிக்க தண்டலையாரின் எழுகடலாற் சூழப்பெற்ற
நல்ல நிலவுலகில், பிறந்தோர் எல்லோரும் மக்கள் என நாட்டல் ஆமோ -
தோன்றியவர் யாவரும் மக்கட்பண்புடையவர் என உறுதிகூறல் ஒவ்வுமோ?,
அற்பு ஊரும் பண்பு உடையார் நற்குணமும் - அன்புமிகும் பண்பு
கொண்டோரின் நல்ல தன்மையும், பண்புஇலார் அழகும் -