மக்கட் பண்பிலார்
உடலழகும், காணின் - ஆராய்ந்தால், பொன்பூவில்
வாசனையும் புன்முருக்கம் பூவும் எனப்புகலல் ஆம் - பொன்னாலான
மலரிலே நறுமணமும் மணமற்ற புல்லிய முருக்கமலரும் போல இருக்கும்
என்று இயம்பலாம்.
(வி-ரை.)
அற்பூரும்
பண்புடையார் நற்குணம் பொற்பூவில்
வாசனையெனப் புகழ்பெறத் தக்கதாகும்; அரியதும் ஆகும். பண்பிலாரழகு
(மணமற்ற) புன்முருக்கம் பூவைப்போலப் பயனற்றதாகும், குமரகுருபர
அடிகளும் கல்வி கேள்வியிற் சிறந்து கற்றவற்றை யெடுத்துச் சொல்லுந் திறம்
பெற்றிருப்பது
"பொன் மலர் நாற்றம் உடைத்து" என
உவமை காட்டினார்.
8.
கலியாணப் பஞ்சம் இல்லை சலியாமல்
தண்டலையில் தாயகனார் அருள்கொண்டு தருமம் செய்யப் பொலிவாகிக் கொழுமீதில்
வந்தபொருள் ஈந்தவைதாம் போக மீந்தால் மலிவாகிச் செல்வம்உண்டாம்! வயல்முழுதும்
விளைந்திடும் நன்மாரி ஆகும்! கலியாணப் பஞ்சமில்லை! களப்பஞ்சம்
இல்லையொரு காலுந் தானே. |
(தொ-ரை.)
தண்டலையில்
தாயகனார் அருள்கொண்டு சலியாமல்
தருமம் செய்ய - தண்டலையில் எழுந்தருளிய தாயகனாரான இறைவரின்
அருளை வாழ்த்தி அறம் புரிந்தால், கொழுமீதில் பொலிவாகி வந்த
பொருள் -
உழவுத் தொழிலிலே அழகுறக் கிடைத்த செல்வத்தில், ஈந்தவை போக
மீந்தால் - (தென்புலத்தாருக்கும் தெய்வத்திற்கும் விருந்தினருக்கும்
சுற்றத்தாருக்கும் தனக்கும் அரசனுக்கும் என ஆறு பங்காக்கிக்) கொடுத்தவை
போக மிச்சமானால், மலிவாகிச் செல்வம் உண்டாம் - மிகுதியாகிச் செல்வம்
கிடைக்கும்; வயல்முழுதும் விளைந்திடும் நன்மாரி ஆகும் - நிலம் எங்கும்
விளையத்தக்க மாரியாக அந்த
|