அறம் இருக்கும், கலியாணப்
பஞ்சம் இலை - அவர்கள் அகத்திலே பல
திருமணங்கள் நடைபெறும், களப்பஞ்சம் ஒருகாலும் இல்லை - விளைவு
கொண்டு நெல்லடிக்கும் களத்திற்கும் ஒருபோதும் வறுமை இராது.
9.
இரக்கப் போனாலும் ..... இரக்கத்தால்
உலகுஆளும் தண்டலையா ரே! சிவனே! எந்த நாளும் இரக்கததான் புறப்பட்டீர்! என்றனையும்
இரக்கவைத்தீர்! இதனால் என்ன? இரக்கத்தான் அதிபாவம்! இரப்பதுதீ
தென்றாலும், இன்மை யாலே இரக்கப்போ னாலுமவர் சிறைக்கப்போ வதுகருமம்
என்னல் ஆமே. |
(தொ-ரை.)
இரக்கத்தால்
உலகு ஆளும் தண்டலையாரே சிவனே -
அருளாலே உயிர்களைக் காக்கும் தண்டலையில் எழுந்தருளிய
சிவபெருமானே!, எந்தநாளும் இரக்கத்தான் புறப்பட்டீர் - எப்போதும்
இரக்கவே சென்றீர், என்றனையும் இரக்கவைத்தீர் - என்னையும் இரந்து
உண்ண அமைத்துவிட்டீர்!, இதனால் என்ன - இவ்வாறு செய்ததனால் என்ன
பயன்?, இரக்கத்தான் அதிபாவம் இரப்பது தீது-பிச்சை யெடுப்பது பெரிய
பாவம்! ஆகையால் அது கெட்டது, என்றாலும் - என்று (அறிஞர்) கூறினாலும்,
இன்மையாலே இரக்கப் போனாலும் - வறுமையாலே பிச்சையெடுக்கச்
சென்றாலும், அவர் சிறக்கப்போவது கருமம் என்னல் ஆமே - அவ்வாறு
இரக்கப்போவோர் சிறப்புடன் செல்வது தகுதி என்று கூறுதல் வேண்டும்.
(வி-ரை.)
"இரக்கப் போனாலும் சிறக்கப் போ"
என்பது
பழமொழி.
--------
|