6.
கொக்கெனவே நினைத்தனையோ?
முக்கணர்தண் டலைநாட்டிற் கற்புடைமங்
கையர்மகிமை மொழியப் போமோ!
ஒக்கும்எரி குளிரவைத்தாள் ஒருத்தி! வில்வே
டனையெரித்தாள் ஒருத்தி! மூவர்
பக்கம்உற அமுதளித்தாள் ஒருத்திஎழு
பரிதடுத்தாள் ஒருத்தி! பண்டு
‘கொக்கெனவே நினைத்தனையோ? கொங்கணவா!'
என்றொருத்தி கூறி னாளே! |
(தொ-ரை.)
முக்கணர்
தண்டலை நாட்டிற் கற்புடை மங்கையர்
மகிமை மொழியப் போமோ - முக்கண்ணர் எழுந்தருளிய தண்டலை யென்னுந்
திருப்பதியை உடைய நாட்டிலே கற்புடைய மாதரின்
பெருமை விளம்ப
முடியுமோ?, ஒருத்தி ஒக்கும் எரி குளிர வைத்தாள் - ஒருத்தி
(தன்னைப்)
போன்ற நெருப்பைக் குளிரச் செய்தாள், ஒருத்தி வில்வேடனை எரித்தாள்
-
ஒருத்தி வில்லையுடைய வேடனைச் சாம்பலாக்கினாள், ஒருத்தி மூவர் பக்கம்
உற அமுது அளித்தாள் - ஒருத்தி முத்தேவரையும் தன் பக்கத்தில்
(குழந்தைகளாக) அமரச் செய்து பாலூட்டினாள், ஒருத்தி எழுபரி தடுத்தாள்
-
ஒருத்தி (கதிரவனுடைய) ஏழு குதிரைகளையும் தடுத்தாள், பண்டு ஒருத்தி,
‘கொங்கணவா! கொக்கு எனவே நினைத்தனையோ' என்று கூறினாள் -
முற்காலத்தில் ஒருத்தி, ‘கொங்கணவா! (என்னையும் நீ யெரித்த) கொக்கு
என்று நினைத்தாயோ?' என்று கூறினாள்.
(வி-ரை.)
அச்சம்
உண்டாக்குந் தோற்ற முடையோன் என்பது
தோன்ற ‘வில் வேடன்' என்றார்.
எரி
குளிரவைத்தவள் சீதை : அநுமான்
இராமன் ஆணைப்படி
சீதையைத் தேடிச் சென்று இலங்கையிற் கண்டான். அவனை அரக்கர் பற்றிச்
சென்று அவன் வாலிலே தீயிட்டனர். இதனை அறிந்த சீதை தீக்கடவுளை
வேண்டி அநுமானைச் சுடாதிருக்குமாறு செய்தாள்.
|