7.
பன்றி பல ஈன்றும் என்ன?
நன்றிதரும் பிள்ளைஒன்று பெற்றாலும்
குலமுழுதும் நன்மை உண்டாம்;
அன்றிஅறி வில்லாத பிள்ளைஒரு
நூறுபெற்றும் ஆவ துண்டோ?
மன்றில்நடம் புரிவாரே! தண்டலையா
ரே! சொன்னேன்! வருடந் தோறும்
பன்றிபல ஈன்றும்என்ன? குஞ்சரம் ஒன்
றீன்றதனாற் பயன்உண் டாமே; |
(தொ-ரை.)
மன்றில் நடம்
புரிவாரே - அம்பலத்திற் கூத்தாடும்
பெருமானே!, தண்டலையாரே! - தண்டலையில் எழுந்தருளியவரே!, பன்றி
வருடந்தோறும் பல ஈன்றும் என்ன - பன்றி ஒவ்வோராண்டினும் பல
குட்டிகளை யீன்றாலும் பயன் என்ன?, குஞ்சரம் ஒன்று ஈன்றதனால் பயன்
உண்டாம் - யானை ஒரு கன்றை யீன்றாலும் மிக்க பயன் உண்டாகும்.
(ஆகையால்), நன்றிதரும் பிள்ளை ஒன்று பெற்றாலும் குலம் முழுதும் நன்மை
உண்டாம் - நலம் தரும் ஒரு மகவைப் பெற்றாலும் மரபுக்கெல்லாம் நலம்
கிடைக்கும், அன்றி - அல்லாமல், அறிவு இல்லாத பிள்ளை ஒருநூறு பெற்றும்
ஆவது உண்டோ - அறிவு அற்ற நூறுபிள்ளைகளைப் பெற்றாலும் ஏதாவது
நன்மையுண்டோ? (இல்லை).
(வி-ரை.)
"பொற்பறிவில்
லாதபல புத்திரப்பே றெய்தலின்ஓர்
நற்புதல்வ
னைப்பெறுதல் நன்றாமே - பொற்பிலாப்
பன்றிபல
குட்டி பயந்ததனால் ஏதுபயன்?
ஒன்றமையா
தோகரிக்கன் றோது"
என்னும் நன்னெறியோடு
இதனை ஒப்பிடுக.
அறிவே
சிறப்புடையது என்பது கருத்து.
|