10.
சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரி
பொற்குடையும் பொற்றுகிலும் பொற்பணியும்
கொடுப்பதென்ன பொருளோ? என்று
நற்கமல முகம்மலர்ந்தே உபசாரம்
மிக்கஇன்சொல் நடத்தல் நன்றே;
கற்கரையும் மொழிபாகர் தண்டலையார்
வளநாட்டிற் கரும்பின் வேய்ந்த
சர்க்கரையின் பந்தலிலே தேன்மாரி
பொழிந்துவிடும் தன்மை தானே! |
(தொ-ரை.)
கல்
கரையும் மொழி பாகர் தண்டலையார் வளநாட்டில்
- கல்லும் கரையும் இனிய மொழியையுடைய உமையம்மையாரை
இடப்பக்கத்திலுள்ள தண்டலை யிறைவ நின் வளம்பொருந்திய நாட்டிலே,
பொன் குடையும் பொன் துகிலும் பொன் பணியும் கொடுப்பது
என்ன
பொருளோ - பொன்னாலான குடையும் ஆடையும் அணிகலன்களும்
கொடுப்பது என்ன சிறப்புடையதோ?, என்று - என அறிந்து, நல் கமலம்
முகம்மலர்ந்தே உபசாரம் மிக்க இன்சொல் நடத்தல் நன்றே - அழகிய
தாமரை மலர் போலும் முகத்திலே மலர்ச்சியுடன் ஆதரித்து மிகுந்த இனிய
மொழி கூறுதலே நல்லது, (அவ்வாறு செய்வது) கரும்பின் வேய்ந்த
சர்க்கரையின் பந்தலிலே தேன்மாரி பொழிந்துவிடும் தன்மை - கரும்பினால்
ஆக்கப்பட்ட சர்க்கரைப் பந்தலிலே தேன்மழை பொழிந்து
விடுவது
போல ஆகும்.
(வி-ரை.)
தான்,ஏ
: அசை நிலைகள்.
சர்க்கரைப் பந்தலில்
தேன்மாரி பொழிந்தாற் போல' என்பது
பழமொழி. கமல முகம் :
கமலம்
: பொருளாகு பெயர்.
இனிய
மொழியில்லாத கொடை பயனளிக்காது என்பது கருத்து.
|