திங்கள்
அணி சடையாரே! தண்டலையா
ரே! சொன்னேன் சிறிது காலம்
கங்கையிலே படர்ந்தாலும் பேய்ச்சுரைக்காய்
நல்லசுரைக் காயா காதே! |
(தொ-ரை.)
திங்கள்
அணி சடையாரே - பிறை முடித்த சடையாரே,
தண்டலையாரே - தண்டலையில் எழுந்தருளியவரே!, அங்கண் உலகில்
சிறியோர் சங்கை அறப்படித்தாலும் கேட்டாலும் பிறர்க்கு உறுதிதனைச்
சொன்னாலும் - அழகிய இடத்தையுடைய உலகத்தில் அற்பர்கள் ஐயம்
இன்றிப் படித்தாலும் பெரியோர் சொல்வதைக் கேட்டாலும் மற்றவர்களுக்கு
நலம் உரைத்தாலும், தாம் அடங்கி நடந்து கதி அடைய மாட்டார் - தாங்கள்
மட்டும் அடக்கமாக நடந்து நல்லகதி சேரமாட்டார்கள், கங்கையிலே
பேய்ச்சுரைக்காய் சிறிது காலம் படர்ந்தாலும் நல்ல சுரைக்காய் ஆகாது
-
கங்கைக் கரையிலே பேய்ச்சுரைக்காய் கொஞ்சகாலம் படர்ந்தாலும் (கங்கை
நீரில் வளர்ந்ததால்) இனிய சுரைக்காய் ஆகாது.
(வி-ரை.)
சொன்னேன்
: தன்மை அசைச்சொல். ‘மறைக்குமாங் கண்டீர்
மரம்' என்புழிக் ‘கண்டீர்' என்பது முன்னிலை அசைச்சொல் ஆயினாற் போல
இதனையும் கொள்க. பேய்ச்சுரை இயல்பாகக் கசக்குந் தன்மை யுடையது.
தன்னிடம் முழுகுவோரைத் தூய்மைப்படுத்தும் கங்கைநீர்க்குப் பேய்ச்சுரையின்
கசப்பை நீக்கும் ஆற்றல் இல்லாமற் போனாற்போல, அறிவை யூட்டும்
கல்வியாலும் கேள்வியாலும் பிறர்க்குக் கூறுவதனாலும் மட்டும் இயற்கையிலே
உள்ள தீய பண்பு விலகாது.
"கற்பூரப் பாத்திகட்டிக்
கத்தூரி யெருப்போட்டுக் கமழ்நீர் பாய்ச்சிப்
பொற்பூர உள்ளிதனை விதைத்தாலும் அதன் குணத்தைப் பொருந்தக் காட்டும்"
- விவேக சிந்தாமணி.
15.
மழைவிட்டும் தூவானம் விட்டதில்லை
உழையிட்ட விழிமடவார் உறவுவிட்டும்
வெகுளிவிட்டும் உலக வாழ்விற்
பிழைவிட்டும் இன்னம்இன்னம் ஆசைவிடா
தலக்கழியப் பெற்றேன்! அந்தோ! |
|