பக்கம் எண் :

23

தழையிட்ட கொன்றைபுனை தண்டலைநீள்
     நெறியே! என் தன்மை யெல்லாம்
மழைவிட்டும் தூவானம் விட்டதில்லை
     யாய் இருந்த வண்மை தானே.

      (தொ-ரை.) தழையிட்ட கொன்றைபுனை தண்டலை நீள் நெறியே -
செழிப்புடைய  கொன்றை  மலர்  அணிந்த  தண்டலையில்  எழுந்தருளிய
நீள்நெறி நாதரே!, உழை  இட்ட  விழி  மடவார் உறவுவிட்டும் - மானின்
கண்களைப்  போன்ற  கண்களையுடைய  பெண்களின் நட்பைவிட்டும்,
வெகுளிவிட்டும் - சீற்றத்தை மாற்றிக்கொண்டும், உலக வாழ்விற் பிழைவிட்டும்.
உலக  வாழ்க்கையில்  நேரும் பிழைகளைத் திருத்திக்கொண்டும், இன்னம்
இன்னம் ஆசைவிடாது - மேலும் மேலும் பற்றுவிடாமல், அலக்கழியப்
பெற்றேன் - துன்பப் படுகிறேன், அந்தோ - ஐயோ!, என் தன்மை யெல்லாம்
- என்னுடைய இயற்கை  யெல்லாம், மழைவிட்டும்  தூவானம்  விட்டது
இல்லையாய் - மழை விலகியும் தூவானம், விடாமல், இருந்த வண்ணம் தான்
- இருந்த அழகுதான்.

      (வி-ரை.) தூவானம் : மழைபெய்து விட்ட பிறகும் இருக்கும் சிறு
தூறல். ‘மழை விட்டும் தூவானம் விடவில்லை' என்பது பழ மொழி.

 

     16. துர்ச்சனப் பிள்ளைக்கு...

கொச்சையிற்பிள் ளைக்குதவும் தண்டலையார்
     வளநாட்டிற் கொடிதாய் வந்த
வச்சிரப்பிள் ளைக்குமுனம் மாதவனே
     புத்திசொன்னான்! வகையும் சொன்னான்!
அச்சுதப்பிள் ளைக்கும் அந்த ஆண்டவரே
     புத்திசொன்னார்! ஆத லாலே
துர்ச்சனப்பிள் ளைக்கூரார் புத்திசொல்லு
     வார் என்றே சொல்லு வாரே!