(தொ-ரை.)
தெள் நீறு அள்ளி அணியும் தண்டலையார் வளநாட்டில்
- தூய திருநீற்றை எடுத்து அணிகின்ற தண்டலை யிறைவரின் வளமுடைய
நாட்டில், ஆண்மை உள்ளோர் - வீரம் உடையோர், விள்ளுற்ற கல்வி
உள்ளோர் - விளக்கிக் கூறப்படும் கல்வி கற்றோர், செல்வம் உள்ளோர் -
செல்வம் உடையோர், அழகு உடையோர் - வனப்புள்ளவர் (ஆகியவரின்),
மேன்மை நோக்கி - உயர்வைப் பார்த்து, நமக்கு இல்லை என உள்ளத்தில்
அழன்று இங்கு உழல்வார் எல்லாம் - நமக்குக் கிடைக்க வில்லையே என்று
மனத்தில் வெதும்பி வெதும்பித் திரிபவர்கள் எல்லோரும், பிள்ளை
பெற்றவர்தமைப் பார்த்து - பிள்ளை பெற்றவர்களை நோக்கி, இருந்து
பெருமூச்சு எறியும் பெற்றியார் - அமர்ந்து பெருமூச்சு விடும்
தன்மையுள்ளவர்.
(வி-ரை.)
ஏ : ஈற்றசை. அழன்றழன்று : அடுக்குத் தொடர்.
தெண்ணீறு அணிவதை உளநாட்டிற்குக் கூட்டுவது சிறப்பு. பொறுமை : பிறர்
செயும் இடையூற்றைத் தாங்கி மன்னிப்பது. பொறாமை : பிறர் ஆக்கம் கண்டு
மனம் வெதும்புதல். பொறுமைக்குப் பொறாமை எதிர்மறை அன்று.
19.
எண்ணமெல்லாம் பொய்யாகும்
மண்ணுலகா ளவும்நினைப்பார், பிறர்பொருள்மேல்
ஆசைவைப்பார், வலிமை செய்வார்,
புண்ணியம்என் பதைச்செய்யார், கடைமுறையில்
அலக்கழிந்து புரண்டே போவார்;
பண்ணுலவு மொழிபாகர் தண்டலையார்
வகுத்தவிதிப் படியல் லாமல்
எண்ணமெல்லாம் பொய்யாகும்! மௌனமே
மெய்யாகும் இயற்கை தானே! |
(தொ-ரை.)
பண் உலவும் மொழி பாகர் தண்டலையார்
வகுத்த
விதிப்படி அல்லாமல் - பண்ணென இனிக்கும் மொழியை உடைய
உமையம்மையாரை இடப் பங்கிற்
|