கொண்டவரான தண்டலையிறைவர்
பங்கிட்டளித்த கட்டளையின் வண்ணமே
நடக்கும் அன்றி, எண்ணம் எல்லாம் பொய் ஆகும் - நினைத்தவை யாவும்
நடவாமற் போகும், மௌனமே மெய் ஆகும் இயற்கை - (சிவன் அருளை
நினைத்துப்) பேசாதிருப்பதே நலந்தருந் தன்மையுடையது, (ஆகையால்) மண்
உலகு ஆளவும் நினைப்பார் - நிலவுலகை ஆள நினைப்பவரும், பிறர்
பொருள்மேல் ஆசை வைப்பார் - மற்றவர் பொருளுக்கு ஆசைப் படுவோரும்,
வலிமை செய்வார் - தங்கள் ஆற்றலாற் (பிறர்க்குக் கேடு) செய்வோரும்,
புண்ணியம் என்பதைச் செய்யார் - சிறிதும் நன்மை செய்யாதவரும்,
கடைமுறையில் அலக்கழிந்து புரண்டே போவார் - இறுதியிற் கலக்கமுற்றுக்
கெட்டழிவார்கள்.
(வி-ரை.)
அவரவர்
செய்யும் வினைக்கேற்பப் பயன்களை இறைவர்
கூட்டுவார். ஆகையால் நாம் நினைத்தவாறே எதுவும் முடியாமல் நம்
வினையின் பயனை நோக்கி இறைவர் கூட்டியவாறே முடியும்.
‘எண்ணமெல்லாம் பொய்! எழுத்தின்படி மெய்' என்பது
பழமொழி.
பேராசைகொண்டு பிறர்க்குக் கேடு செய்யலாகாது என்பது கருத்து.
20.
சொன்னதைச் சொல்லும் இளங்கிள்ளை
சொன்னத்தைச் சொல்லும்இளங் கிள்ளையென்பார்
தண்டலையார் தொண்டு பேணி
இன்னத்துக் கின்னதென்னும் பகுத்தறிவொன்
றில்லாத ஈனர் எல்லாம்
தன்னொத்துக் கண்டவுடன் காணாமல்
முறைபேசிச் சாடை பேசி
முன்னுக்கொன் றாயிருந்து பின்னுக்கொன்
றாய்நடந்து மொழிவர் தாமே. |
(தொ-ரை.)
இளங்கிள்ளை
சொன்னத்தைச் சொல்லும் என்பார் -
இளங்கிளி நாம் சொன்னத்தையே சொல்லும் என்று கூறுவார்கள், (அவ்வாறு)
தண்டலையார் தொண்டு
|