பக்கம் எண் :

28

பேணி இன்னத்துக்கு இன்னது  எனும்  பகுத்தறிவு  ஒன்று  இல்லாத ஈனர்
எல்லாம் - தண்டலை யிறைவருக்குத் தொண்டு புரிய விரும்பி இதற்கு இது
என்று
அறியும் பகுத்தறிவு சிறிதும் பெறாத இழிந்தோர் யாவரும், தன் ஒத்துக்
கண்டவுடன் முறைபேசி - தன்னை நேரே பார்த்தவுடன் தகுதிப்படி உரையாடி,
காணாமல் சாடை பேசி - காணாதபோது குறிப்பாக (இகழ்ந்து கூறி, இவ்வாறு),
முன்னுக்கு ஒன்றாய் இருந்து - எதிரில்  ஒருவாறு  நடந்து  கொண்டும்,
பின்னுக்கு ஒன்றாய் நடந்து - காணாதபோது ஒருவாறு நடந்து கொண்டும்
மொழிவர். (அவ்வாறே முன்னுக்குப் பின் வேறாக) உரைப்பதுஞ் செய்வார்கள்.

      (வி-ரை.) தண்டலையார் தொண்டுபேணிப்  பகுத்தறிவு  பெறாத
ஈனர் (தொண்டு பேணுவதனாற் பகுத்தறிவு பெறலாம்) - சொன்னதைச்
சொல்லும் கிளிப்பிள்ளை  போன்றவர்கள்  என்றும்  அத்தகையோர்
ஒருவரைக் கண்டால் ஒன்றும்,  காணாதபோது  ஒன்றுமாகப்  பேசியும்
நடந்தும் வருவார்கள் என்றும் கொள்க.
‘சொன்னதைச்  சொல்லும்
கிளிப்பிள்ளை'
என்பது பழமொழி, ‘முறைபேசிச் சாடை பேசி' ‘முன்னுக்
கொன்றாய் இருந்து பின்னுக் கொன்றாய் நடந்து மொழிவர்'
என்பன
மரபு மொழிகள்.
தாம், ஏ : ஈற்றசைகள்.

 

     21. விடியல்மட்டும் மழைபெயினும்

கொடியருக்கு நல்லபுத்தி சொன்னாலும்
     தெரியாது! கொடையில் லாத
மடையருக்கு மதுரகவி உரைத்தாலும்
     அவர்கொடுக்க மாட்டார் கண்டீர்!
படியளக்கும் தண்டலைநீள் நெறியாரே!
     உலகமெலாம் பரவி மூடி
விடியல்மட்டும் மழைபெயினும் அதின்ஓட்டாங்
     குச்சில்முளை வீசி டாதே!

      (தொ-ரை.) படி அளக்கும் தண்டலைநீள் நெறியாரே - உயிர்களுக்குத்
தக்க பயனை ஊட்டும் தண்டலையில் எழுந்தருளிய நீள் நெறியாரே!; உலகம்
எலாம் பரவி மூடி விடியல்