பக்கம் எண் :

29

மட்டும் மழை பெயினும் - உலகெங்கும் படர்ந்து கவிந்து காலை வரையில்
மழை பெய்தாலும், அதின்  ஓட்டாங்குச்சில் முளை  வீசிடாது - அதனால்,
ஓட்டாங்குச்சில்  முளைக்காது, (ஆகையால்),  கொடியருக்கு  நல்லபுத்தி
சொன்னாலும் தெரியாது - தீயோருக்கு  நல்லறிவு  கூறினாலும் விளங்காது,
கொடையில்லாத மடையருக்கு மதுரகவி உரைத்தாலும் - ஈகைப்பண்பு அற்ற
பேதையருக்கு இனிய பாவைப் பகர்ந்தாலும், அவர் கொடுக்கமாட்டார் - அப்
பேதையர் ஒன்றும் ஈயமாட்டார்.

      (வி-ரை.) படி அளத்தல் : ஊழ்வினைக்கு  ஏற்றவாறு  பயனை
நுகர்வித்தல். கண்டீர் : முன்னிலை  அசைச்சொல்
. ‘ஓட்டாங் குச்சில்
முளைக்காது'
என்பது மரபு மொழி. ‘ஓட்டாங் கிளிஞ்சில்' என்றும் பாடம்.
(ஓட்டாங் கிளிஞ்சில் : ஓட்டைப்போன்ற கிளிஞ்சில்)
‘கொடிறும் பேதையும்
கொண்டது விடா'
என்பது பழமொழி.

 

  22. தன்பாவம் தன்னோடு

செங்காவி மலர்த்தடம்சூழ் தண்டலைநீள்
     நெறியே! நின் செயலுண் டாகில்
எங்காகில் என்ன? அவர் எண்ணியதெல்
     லாம்முடியும்!, இல்லை யாகில்,
பொங்காழி சூழுலகில் உள்ளங்கால்
     வெள்ளெலும்பாய்ப் போக ஓடி
ஐங்காதம் போனாலும் தன்பாவம்
     தன்னுடனே ஆகும் தானே.

      (தொ-ரை.)  செங்காவி  மலர்த்தடம்சூழ் தண்டலை  நீள் நெறியே -
சிவந்த குவளை மலர்களையுடைய பொய்கைகள் சூழ்ந்த தண்டலைநீள்
நெறியில் எழுந்தருளியவரே!, நின் செயல் உண்டாகில் - அடிகளின் நல்ல
அருள்  கிடைத்தால், எங்கு  ஆகில் என்ன அவர் எண்ணியது எல்லாம்
முடியும் - எவ்விடமாயினும்  என்ன? அவர்கள்  நினைத்தது  முற்றும்
முற்றுப்பெறும், இல்லை ஆகில் - அடிகளின்