அருள் கிடையா
விட்டால், பொங்கு ஆழிசூழ் உலகில் - நீர் மிகுங்
கடல்சூழ்ந்த உலகத்தில், உள்ளங்கால் வெள்எலும் பாய்ப் போக - உள்ளங்
காலில் (தசை தேய்ந்து) வெள்ளை எலும்பு தெரியும் படியாக, ஐங்காதம்
ஓடிப்போனாலும் தன் பாவம் தன் உடனே ஆகும் - ஐந்துகாத தொலைவு
விரைவாகப்போய் அலைவுற்றாலும் தான் செய்த தீவினை தன்னுடனேயே இருக்கும்.
(வி-ரை.)குவளையிற்
செங்குவளை கருங்குவளை யென இருவகை
உள. இறைவன் செயல் நம் ஊழ்வினைக்கு ஏற்றவாறே அமையும். ஆகையால்,
"நின்செயல் உண்டாகில் எண்ணிய எல்லாம் முடியும்" என்பதற்கு, ‘நின் அருள்
நல்வினையின் விளைவாகக் கிடைத்தால் எண்ணிய யாவும் முடியும்' எனப்
பொருள் உரைத்துக் கொள்க.
‘உள்ளங்கால்
வெள்ளெலும்பாய்ப் போக'
என்பது
மரபுமொழி. ‘ஐங்காதம்
போனாலும் தன்பாவம் தன்னுடனே'
என்பது
பழமொழி.
பேராசை
வேண்டாம்; அமைதி வேண்டும் என்பன கருத்து.
23.
நாய் அறியாது...
தாயறிவாள் மகளருமை! தண்டலைநீள்
நெறிநாதர் தாமே தந்தை
ஆயறிவார் எமதருமை! பரவையிடம்
தூதுசென்ற தறிந்தி டாரோ?
பேயறிவார் முழுமூடர்! தமிழருமை
அறிவாரோ? பேசு வாரோ?
நாயறியா தொருசந்திச் சட்டிப்பா
னையின்அந்த நியாயந் தானே! |
(தொ-ரை.)மகள்
அருமை தாய் அறிவாள்-தன் மகளின் அருமையைத்
தாயே அறிவாள், எமது அருமை தண்டலை நீள்நெறிநாதர் தாமே தந்தையாய்
அறிவார் - (அடியரான) எங்கள் அருமையைத் தண்டலை நீள் நெறியிறைவரே
தந்தையாகி அறிவார், பரவையிடம் தூது சென்றது அறிந்திடாரோ -
சிவபெருமான் (தம் அடியவரான சுந்தரர் வேண்டுகோளின் வண்ணம்)
பரவையம்மை
|