யாரிடம்
தூது நடந்ததை உலகினர் அறியமாட்டாரோ?, முழுமூடர் பேய்
அறிவார் - முற்றினும் பேதையர் பேய்த் தன்மையையே அறிவார், தமிழ்
அருமை அறிவாரோ - தமிழின் அருமையை உணர்வாரோ?, பேசுவாரோ -
(தமிழைப்பற்றி) ஏதாவது உரைப்பாரோ? (ஒன்றும் செய்யார்). ஒரு சந்திச்
சட்டிப்பானையின் அந்த நியாயம் நாய் அறியாது - ஒருபோது(க்குச்
சமைக்கும்) சட்டிப்பானையின் அந்த உயர்வை நாய் அறியாது.
(வி-ரை.)
உலகுக்கெல்லாந்
தந்தை இறைவரே ஆகையால்
‘தண்டலைநீள்நெறி ......... எமது அருமை' என்றார். சுந்தரமூர்த்தி நாயனாரின்
வேண்டுகோளுக் கிணங்கிப் பரவையின் ஊடலைத் தவிர்க்கச் சென்றது
அடியவரின் அருமையையுந் தமிழின் அருமையையும் உணர்ந்தே
யாகையால்
‘அறிந்திடாரோ?' என்றார். ‘பே' என்பது ‘பேய்' எனத் திரிந்திருத்தல்
வேண்டும். பே என்னும் உரிச்சொல் அச்சப் பொருளைத் தரும். ஆகவே
முழு மூடர் அச்சத்திற்காகக் கொடுப்பரே அன்றித் தமிழருமை அறிந்து
கொடார் என்பது கருத்தாகக் கொள்க. ‘கொல்லச் சுரப்பதாம் கீழ்'என்றார்
பிறரும் : ஒரு சந்திப் பானை : நோன்புக்குச் சமைக்கவெனத் தனியே
வைத்திருக்கும் சமையற் கலம். நாய்க்கு எல்லாப் பானையும் ஒரே
மாதிரியாகத்தான் மதிப்புப் பெறும். அவ்வாறே மூடர்
யாவரையும்
ஒரு
தன்மையராகவே கருதுவர்.
‘நாய் அறியுமோ ஒருசந்திப்பானையை?'
‘பெற்றவள் அறிவாள் பிள்ளை அருமை' என்பன
பழமொழிகள். ஒருசந்தி
- ஒருபோது.
24.
எட்டிமரம் பழுத்தாலும் ஈயாதார் வாழ்ந்தாலும் என்?
கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்
கனிகள்உப காரம் ஆகும்;
சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்
இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார்
மட்டுலவும் சடையாரே! தண்டலையா
ரே! சொன்னேன்! வனங்கள் தோறும்
எட்டிமரம் பழுத்தாலும் ஈயாதார்
வாழ்ந்தாலும் என்உண் டாமே? |
|