பக்கம் எண் :

32

      (தொ-ரை.) மட்டு உலவும் சடையாரே தண்டலையாரே -
மணங்கமழும் சடையை யுடையவரே! தண்டலை யிறைவரே!, வனங்கள்
தோறும் எட்டிமரம் பழுத்தாலும்  ஈயாதார்  வாழ்ந்தாலும்  என்  உண்டாம்
- காடுகள்  எங்கும் எட்டிமரம்  பழுப்பதனாலும் (நாடுகள் எங்கும்)  
கொடைப்  பண்பிலர் வாழ்வதனாலும் என்ன  பயன் கிடைக்கும்?, கட்டு
 மாங்கனி  வாழைக்கனி பலவின் கனிகள் உபகாரம் ஆகும் -
(பழுப்பதற்காகக்) கட்டிவைக்கும் மா, வாழை,  பலா  ஆகிய  இவற்றின்
 பழங்கள் (மற்றவர்க்குப்)  பயன்படும்; (அவ்வாறே),  அவ்வணம்  சிட்டரும்
 தேடும்  பொருளை  யெல்லாம் இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் -
நல்லோரும் தாம் சேர்க்கும் பொருள் முழுதும் வறியருக்கே அளித்துச்
சிறப்புடன் வாழ்வார்கள்.

      (வி-ரை.) சிட்டர் (வடமொழி) நல்லோா். ‘எட்டி பழுத்தால் என்?
ஈயாதார் வாழ்ந்தால் என்?'
என்பன பழமொழிகள்.

 

     25. காதவழி பேரில்லான்......

ஓதரிய தண்டலையார் அடிபணிந்து
     நல்லவன்என் றுலகம் எல்லாம்
போதம்மிகும் பேருடனே புகழ்படைத்து
     வாழ்பவனே புருடன் அல்லால்
ஈதலுடன் இரக்கமின்றிப் பொன்காத்த
     பூதமென இருந்தால் என்ன?
காதவழி பேரில்லான் கழுதையோ
     டொக்கும்எனக் காண லாமே!

      (தொ-ரை.) ஓத அரிய தண்டலையார் அடிபணிந்து புகழுக்கு எட்டாத
தண்டலை யிறைவரின் திருவடிகளை வணங்கி, உலகம் எல்லாம் நல்லவன்
என்று போதம் மிகும் பேருடனே - உலகமெங்கும் ‘இவன் நல்லவன்' என்று
கூறும் அறிவுமிக்க பெயருடன், புகழ் படைத்து வாழ்பவனே புருடன் - புகழும்
பெற்றும் வாழ்வோனே ஆண்