பக்கம் எண் :

33

மகன்,  அல்லால் - (அவ்வாறு)  இன்றி,  ஈதலுடன்  இரக்கம்  இன்றிப்
பொன்காத்த பூதம் என இருந்தால் என்ன - கொடையும் அருளும் இல்லாமற்
பொன்னைக்  காக்கும் பூதம்போல இருப்பதால் யாது பயன்?, காதவழி
பேரில்லான் கழுதையோடு ஒக்கும் எனக் காணலாமே - காதவழியேனும்
புகழில்லாதவன் கழுதைக்குச் சமமாவான் என்று (உலகுரைப்பதை) அறியலாம்.

      (வி-ரை.) ஓதுதல் - சொல்லுதல். இறைவரைப்பற்றி ஓதுதலாவது
புகழ்தல் : எனவே, ‘ஓத அரிய' என்பது ‘புகழ்தற்கரிய' எனப் பொருள் தந்தது.
‘ஓத' என்பதன் இறுதி ‘அகரம்' செய்யுள் விகாரத்தால் தொக்கது.

 

     26. செவிடன் காதினிற் சங்கு குறித்தல்

பரியாமல் இடும்சோறும் ஊமைகண்ட
     கனவும்ஒன்றும் பரிசில் ஈயான்
அரிதான செந்தமிழின் அருள்சிறிதும்
     இல்லாதான் அறிவு மேதான்
கரிகாலன் பூசைபுரி தண்டலைநீள்
     நெறியாரே! கதித்த ஓசை
தெரியாத செவிடன்கா தினிற்சங்கு
     குறித்ததெனச் செப்ப லாமே.

      (தொ-ரை.) கரிகாலன் பூசைபுரி தண்டலைநீள் நெறியாரே - கரிகாற்
சோழன் வழிபாடு செய்த தண்டலைநீள் நெறியில் எழுந்தருளிய இறைவரே!,
பரியாமல் இடும் சோறும் - அன்பு இன்றிப் படைக்கும் உணவும், ஊமை
கண்ட  கனவும் - ஊமையன்  கண்ட  கனவும், பரிசில் ஒன்றும்  ஈயான் -
புலவருக்குப் பரிசு ஒன்றும் கொடாமல், அரிது ஆன செந்தமிழின் அருள்
சிறிதும் இல்லாதான் அறிவும் - அருமையான செந்தமிழின் அருளைச் சற்றும்
பெறாதவனுடைய அறிவும், கதித்த ஓசை தெரியாத செவிடன் காதினில் -
பேரொலியை அறியாத செவிட