னுடைய காதில்,
சங்கு குறித்தது எனச் செப்பலாம் - சங்கு முழங்கியது
போலாகும் என்று கூறலாம்.
(வி-ரை.)
சோறும், கனவும், அறிவும், செவிடன் காதினிற் சங்கு
குறித்தது எனக் கூட்டுக. புலவருக்குப் பரிசு கொடுத்துச் செந்தமிழின் நயத்தை
அவர்கள் வாயிலாக உணராதவனைச் ‘செந்தமிழின் அருள் சிறிதும்
இல்லாதான்' என்றார். ‘ஊமையன்
கண்ட கனவு' ‘செவிடன் காதினிற்
சங்கு' என்பவை
மரபு மொழிகள்.
27.
மன்னுயிர்க் கிரங்குவது
முன்னரிய மறைவழங்கும் தண்டலையார்
ஆகமத்தின் மொழிகே ளாமல்
பின்னுயிரை வதைத்தவனும், கொன்றவனும்
குறைத்தவனும், பேரு ளோனும்,
அந்நெறியே சமைத்தவனும், உண்டவனும்
நரகுறுவர்; ஆத லாலே
தன்னுயிர்போல் எந்நாளும் மன்னுயிருக்
கிரங்குவது தக்க தாமே. |
(தொ-ரை.)
முன் அரிய மறை வழங்கும்
தண்டலையார் ஆகமத்தின்
மொழி கேளாமல் - முற்காலத்தில் அருமையான மறையை (உலகுக்கு)
அருளிய தண்டலையாரின் ஆகம நூல்களிற் கூறியதைக் கேட்காமல், உயிரை
வதைத்தவனும் - உயிருக்கு இடுக்கண் விளைவித்தவனும், கொன்றவனும் -
அழித்தவனும், குறைத்தவனும் - (உயிராற்றலைக்) குறைவு படுத்தியவனும்,
பேர் உளோனும் - (முன் நின்று கொலையாளி எனப்) பெயர் பெற்றவனும்,
அந்நெறியே சமைத்தவனும் - கொலைவழியிலே நின்று சமையல் செய்தவனும்,
உண்டவனும் - சாப்பிட்டவனும் (ஆகியோர்), நரகு உறுவர் - நரகத்தை
அடைவர், ஆதலால் - எந்நாளும் தன் உயிர்போல் மன் உயிருக்கு
இரங்குவதும் தக்கது ஆம் - எப்போதும் தன் உயிரைப்போலப் பிற
வுயிரையும் நினைத்து இரக்கம் காட்டுவதும் நன்மையாகும்.
|