உரையாடுவதற்கும்
உண்பதற்கும் உரிய வாய் பொய்ம்மொழி
யுரைத்தால் உணவும் பொய்யாவது இயற்கை யென்பது தோன்றப்
‘பொய்
யுரைக்கும் வாயினர்க்குப் போசனமும் கிடையாது!' என்றார்.
‘பொய்சொன்ன
வாய்க்குப் போசனம் கிட்டாது' என்பது
பழமொழி.
32.
சந்திரனைப் பார்த்து நாய்குரைத்தால் என்ன?
அந்தணரை நல்லவரைப் பரமசிவன்
அடியவரை அகந்தை யால்ஓர்
நிந்தனைசொன் னாலுமென்ன? வைதாலும்
என்ன? வதில் நிடேதம் உண்டோ?
சுந்தரர்க்குத் தூதுசென்ற தண்டலைநீள்
நெறியாரே! துலங்கும் பூர்ண
சந்திரனைப் பார்த்துநின்று நாய்குரைத்த
போதில்என்ன? தாழ்ச்சி தானே? |
(தொ-ரை.)
சுந்தரர்க்குத் தூதுசென்ற தண்டலைநீள் நெறியாரே
-
சுந்தரமூர்த்தி நாயனாருக்காக (பரவையாரிடம்) தூதுபோன தண்டலைநீள்நெறி
இறைவரே!, துலங்கும் பூர்ண சந்திரனைப் பார்த்து நின்று நாய் குரைத்த
போதில் என்ன தாழ்ச்சி - விளங்கும் முழுமதியை நோக்கி நின்றவாறு நாய்
குரைப்பதனால் முழுமதிக்கு என்ன குறை உண்டாகும்?, (ஆகையால்),
அந்தணரை நல்லவரைப் பரமசிவன் அடியவரை அகந்தையால் ஓர் நிந்தனை
சொன்னாலும் என்ன - செருக்கினாலே ஒரு பழி கூறினாலும் என்ன பயன்?
வைதாலும் என்ன - இகழ்ந்தாலும் என்ன பயன்?, அதில் நிடேதம்
உண்டோ
- அவ்வாறு இழிவு படுத்துவதால் அவர்களுக்குப் (பிறரால்) விலக்கு
ஏற்படுமோ?
(வி-ரை.)
‘சந்திரனைப் பார்த்து நாய்குரைத்தாற் போல'
என்பது
பழமொழி.
|