பக்கம் எண் :

4

                   பழமொழி விளக்கம்

                        என்னும்

                   தண்டலையார் சதகம்

     
                மூலமும் உரையும்

                       காப்பு - 1

                 விநாயகர்

சீர்கொண்ட கற்பகத்தின் வாதாவி நாயகனைத்
     தில்லை வாழும்
கார்கொண்ட கரிமுகனை விகடசக்ர கணபதியைக்
     கருத்துள் வைப்பாம்
பேர்கொண்ட ஞானநா யகிபாகன் தண்டலையெம்
     பெருமான் மீதில்
ஏர்கொண்ட நவகண்டம் இசைந்தபழ மொழிவிளக்கம்
     இயம்பத் தானே.

      (தொடர் - உரை.) பேர்கொண்ட  ஞானநாயகி  பாகன்  தண்டலை
எம்பெருமான் மீதில் - புகழ்பெற்ற ஞான நாயகி அம்மையை இடப்பக்கத்திற்
கொண்டவராகிய  தண்டலை  நீள்நெறி என்னும் திருப்பதியில் எழுந்தருளிய
எம்  இறைவரான  சிவபெருமான்மேல், ஏர்கொண்ட  நவகண்டம்  இசைந்த
பழமொழி  விளக்கம் இயம்ப - அழகிய  ஒன்பது கண்டங்களிலும் வழங்கிய
பழமொழிகளுக்கு விளக்கம் கூற, சீர்கொண்ட கற்பகத்தின் -
சிறப்பினையுடைய கற்பகத்தினைப்