பக்கம் எண் :

41

34. சன்னதமானது குலைந்தாற் கும்பிடு எங்கே?

சின்னமெங்கே? கொம்பெங்கே? சிவிகையெங்கே?      பரியெங்கே? சிவியார் எங்கே?
பின்னைஒரு பாழும்இல்லை! நடக்கைகுலைந்
     தால்உடனே பேயே அன்றோ?
சொன்னவிலும் தண்டலையார் வளநாட்டிற்
     குங்கிலியத் தூபம் காட்டும்
சன்னதமா னதுகுலைந்தாற் கும்பிடெங்கே?
     வம்பர்இது தனையெண் ணாரே!

      (தொ-ரை.) சொல் நவிலும் தண்டலையார் வள நாட்டில் - புகழ்பெற்ற
தண்டலை யிறைவரின்  வளமிக்க  நாட்டிலே,  நடக்கை  குலைந்தால் -
(ஒருவருடைய) ஒழுங்கு கெட்டால், சின்னம் எங்கே (வெற்றிச்) சின்னம்
எங்கே?, கொம்பு எங்கே - (ஊது) கொம்பு எங்கே?, சிவிகை எங்கே -
பல்லக்கு எங்கே?, சிவியார் எங்கே? - பல்லக்குத் தூக்குவோர் எங்கே?, பரி
எங்கே - குதிரை எங்கே?, பின்னை ஒரு பாழும் இல்லை - (ஒழுங்கு கெட்ட
பிறகு) எந்த மதிப்பும் இராது, உடனே பேயே அன்றோ - உடனே
பேய்போலவே ஆய்விடுவர், குங்கிலியத் தூபம் காட்டும் சன்னதமானது
குலைந்தால் கும்பிடு எங்கே - குங்கிலியப் புகை காட்டும் முயற்சியை விட்டு
விட்டால் (கோயிலுக்கு மக்கள் வந்து) கும்பிடுவது இருக்குமா?, வம்பர்
இதுதனை எண்ணார் - வீண்பேச்சுக்காரர் நன்னடக்கையைப் பற்றிச் சிந்தியார்.

      (வி-ரை.) சின்னம் : ஒருவகை ஊதுகருவி. குங்கிலியம் - ஒரு
வகையான புகைப் பொருள்.

 

35. துறவிக்கு வேந்தன் துரும்பு

சிறுபிறைதுன் னியசடையார் தண்டலைசூழ்
     பொன்னிவளம் செழித்த நாட்டில்,
குறையகலும் பெருவாழ்வும் மனைவியும்மக்
     களும்பொருளாக் குறித்தி டாமல்,