மறைபயில்பத் திரகிரியும் பட்டினத்துப்
பிள்ளையும்சேர் மகிமை யாலே,
துறவறமே பெரிதாகும்! துறவிக்கு
வேந்தன் ஒரு துரும்பு தானே.
|
(தொ-ரை.)
சிறுபிறை துன்னிய சடையார் தண்டலை சூழ்
பொன்னி வளம் செழித்த நாட்டில் - சிறு பிறை மதி பொருந்திய
சடையுடைய இறைவரின் தண்டலையைச் சூழ்ந்த காவிரி வளம்
கொழிக்கும் நாட்டினில், குறை அகலும் பெருவாழ்வும் மனைவியும்
மக்களும் பொருள்ஆ குறித்திடாமல் - குறைவற்ற பெரிய வாழ்வும்
மனைவியும் மக்களும் பொருளாக நினையாமல், மறைபயில்
பத்திரகிரியும் பட்டினத்துப் பிள்ளையும் சேர் மகிமையாலே -
மறையோதிய பத்திர கிரியாரும் பட்டினத்துப் பிள்ளையாரும் சேர்ந்த
பெருமையினால், துறவறமே பெரிது ஆகும் - துறவறமே
சிறப்புடையதாகும்!, துறவிக்கு வேந்தன் ஒரு துரும்புதானே - துறவிக்கு
மன்னன் ஒரு துரும்பைப் போன்றவனே.
(வி-ரை.)
பொன்னி : பொன்
கொழிப்பது : காவிரி
‘துறவிக்கு
வேந்தன் துரும்பு' என்பது
பழமொழி.
36.
ஆரியக் கூத்தாடுகினும்
பேரிசைக்கும் சுற்றமுடன் மைந்தரும்மா
தரும்சூழப் பிரபஞ் சத்தே
பாரியையுற் றிருந்தாலும் திருநீற்றிற்
கழற்காய்போல் பற்றில் லாமல்,
சீரிசைக்குந் தண்டலையார் அஞ்செழுத்தை
நினைக்கின்முத்தி சேர லாகும்;
ஆரியக்கூத் தாடுகினும் காரியமேற்
கண்ணாவ தறிவு தானே.
|
|