பக்கம் எண் :

44

      (தொ-ரை.) மரந்தனை வைத்தவர் வாடாமல் நாளும் தண்ணீரும்
வார்ப்பர் - மரத்தை வைத்தவர்கள் அது வாடிடாமல் எப்போதும் தண்ணீரும்
வார்ப்பார்கள், (ஆகையால்), இத்தனை நாளும் இரந்தனை, பரந்தனை நான்
என்று அலைந்தாய் - இத்துணை நாட்களாக (உணவு) இரந்து, உன்னையே
உன் தலைவனாக நினைத்துத் திரிந்தாய்!, இனிமேலேனும் - இனியாவது,
கரந்தைமதி சடை அணியும் தண்டலைநீள் நெறியாரே காப்பார் - திருநீற்றுப்
பச்சையையும்  பிறைத்திங்களையும்  சடையில்  மிலைந்த  தண்டலை
நீள்நெறியிறைவரே காத்தருள்வார், என்னும் உரந்தனை வைத்து இருந்தபடி
இருந்தனையே - என்கிற உறுதியை மேற்கொண்டு (பேராசையின்றி)
அமைதியாக இருந்தனையானால், உள்ள எலாம் உண்டாம் உண்மை -
(பழவினை வாயிலாக) இருப்பன யாவும் கிடைக்கும்! இது வாய்மையாகும்!


      (வி-ரை.) வார்ப்பர் தாமே : தாம், ஏ : ஈற்றசைகள். ‘மரம்
வைத்தவன் தண்ணீர் வார்ப்பான்'
என்பது பழமொழி.
 

 

38. செங்கோலரசனே தெய்வம்

நாற்கவியும் புகழவரும் தண்டலையார்
    வளநாட்டில் நல்ல நீதி
மார்க்கமுடன் நடந்து, செங்கோல் வழுவாமற்
    புவியாளும் வண்மை செய்த
தீர்க்கமுள்ள அரசனையே தெய்வம் என்பார்
    கொடுங்கோன்மை செலுத்தி நின்ற
மூர்க்கமுள்ள அரசனும்தன் மந்திரியும்
   ஆழ்நரகில் மூழ்கு வாரே!


      (தொ-ரை.) நால் கவியும் புகழவரும் தண்டலையார் வளநாட்டில் -
நால்வகைக் கவிஞர்களும் புகழுமாறு சிறப்புற்ற தண்டலை இறைவரின்
செழிப்பான நாட்டில், நல்ல நீதிமார்க்கமுடன் நடந்து - நல்ல அறநெறியுடன்
ஒழுகி, செங்கோல்