பக்கம் எண் :

45

வழுவாமல் புவி ஆளும் வண்மை செய்த - நடுநிலை தவறாத ஆட்சியில்
தவறாமல் உலகத்தை  ஆளும் கொடையாளியான, தீர்க்கம் உள்ள
அரசனையே தெய்வம் என்பார் - துணிவுடைய மன்னனையே கடவுள் என்று
கூறுவார்கள், கொடுங்கோன்மை செலுத்தி நின்ற - தவறான ஆட்சி

நடத்துகின்ற, மூர்க்கம் உள்ள அரனும் தன் மந்திரியும் - கொடிய அரசனும்
அவனுடைய அமைச்சனும், ஆழ்நரகில் மூழ்குவார் - ஆழமான நரகத்திலே
அழுந்துவார்கள்.


      (வி-ரை.) நாற்கவி : ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம். ‘அரசனையே
தெய்வம்' என்றார் இறை என்ற சொல் அரசனையும், தெய்வத்தையுங் குறிக்கும்
ஆதலால், ஏ : தேற்றம்.  ‘திருவுடை  மன்னரைக்  காணில்  திருமாலைக்
கண்டேனே  என்னும்'  என்றார்  பிறரும். தீர்க்கம் - துணிவு,  உறுதி.

 

39. காதிற் கடுக்கன் முகத்துக் கழகு!

ஓதரிய வித்தைவந்தால் உரியசபைக்
     கழகாகும்; உலகில் யார்க்கும்
ஈதலுடன் அறிவுவந்தால் இனியகுணங்
     களுக்கழகாய் இருக்கும் அன்றோ?
நீதிபெறு தண்டலையார் திருநீறு
     மெய்க்கழகாய் நிறைந்து தோன்றும்;
காதிலணி கடுக்கனிட்டால் முகத்தினுக்கே
     அழகாகிக் காணுந் தானே.


      (தொ-ரை.) காதில் அணி கடுக்கன் இட்டால் முகத்தினுக்கே அழகு
ஆகிக் காணும் - காதில் அழகிய கடுக்கனை அணிந்தால் முகத்திற்கு அழகிய
காட்சி தரும், (அவ்வாறே) ஓத அரிய வித்தை வந்தால் உரிய சபைக்கு அழகு
ஆகும் - புகழவியலாத  கல்விப்பேறு  கிடைத்தால், (கல்விக்குத்) தக்க
அவையிலிருக்க அழகாய்  இருக்கும்; உலகில்  யார்க்கும்  ஈதலுடன்
அறிவுவந்தால் இனிய
குணங்களுக்கு