அழகாய் இருக்கும்
அன்றோ - உலகினில் எவருக்கும் கொடைப்பண்புடன்
அறிவுங்கூடினால் (மற்ற) இனிய பண்புகளுக்கு அழகுதரும் அன்றோ?, நீதி
பெறு தண்டலையார் திருநீறு மெய்க்கு அழகாய் நிறைந்து தோன்றும் - அறம்
நிறைந்த தண்டலை யிறைவரின் திருநீறு தன்னை அணிந்த உடம்புக்கு
முற்றிலும் அழகாகக் காணப்படும்.
(வி-ரை.)
காணுந்தானே
: தான், ஏ: ஈற்றசைகள். நீதி பெறுதலைத்
தண்டலைக்கு ஆக்குக. ‘கவினைத்தருவது நீறு' ‘பூச இனியது நீறு' ‘பேணி
அணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு' என்று திருஞான சம்பந்தர்
திருவாய் மலர்ந்தருளியன காண்க.
‘காதுக்குக் கடுக்கன், முகத்துக்கு
அழகு'
என்பது பழமொழி.
40.
கவி சொல்லார்!
‘பாரதியார்' ‘அண்ணாவி' ‘புலவர்' என்பார்
கல்வியினிற் பழக்கம் இல்லார்!
சீரறியார் தளையறியார் பல்லக்கே
றுவர்! புலமை செலுத்திக் கொள்வார்!
ஆரணியும் தண்டலைநீள் நெறியாரே!
இலக்கணநூல் அறியா ரேனும்
காரிகையா கிலுங்கற்றுக் கவிசொல்லார்
பேரிகொட்டக் கடவர் தாமே.
|
(தொ-ரை.)
ஆர் ஆணியும்
தண்டலைநீள் நெறியாரே - ஆத்திமாலை
அணிந்த தண்டலை நீள் நெறி இறைவரே!, கல்வியினில் பழக்கம் இல்லார்
பாரதியார் அண்ணாவி புலவர் என்பார் - கலையறிவு பயிலாதவர் (சிலர்)
பாரதியாரெனவும் அண்ணாவியென்றும் புலவர் என்றும் (தம்மைப் புகழ்ந்து)
சொல்லிக் கொள்வர்; சீர் அறியார்! தளை அறியார் பல்லக்கு ஏறுவர் புலமை
செலுத்திக் கொள்வார் - (செய்யுளின் உறுப்பான) சீரை அறியாதவரும்
தளையை உணராதவரும் பல்லக்கில் ஏறிக்கொண்டு புலவர் போல
நடந்துகொள்வார்! (இதனை என்னென்பது!) இலக்கண நூல் அறியாரேனும் -
|