(அவர்கள்)
இலக்கண நூலைப் பயிலா விடினும், காரிகையாகிலும் கற்றுக்
கவிசொல்லார் பேரி கொட்டக் கடவர் - (யாப்பிலக்கணமான)
காரிகையென்னும் நூலையேனும் படித்துச் செய்யுள் செய்யுந் திறமில்லாதவர்
(வயிற்றுப் பிழைப்புக்காகப்) பறையடித்து வாழக் கடவர்.
(வி-ரை.)
கடவர் தாமே : தாம், ஏ : ஈற்றசைகள். ஆர் - ஆத்தி :
காரிகை கற்றுக் கவிபாடுவதினும் பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்றே
என்பதனையும் உணராதவர்களின் இழிவையுணர்த்த, ‘காரிகை யாகிலுங்
கவிசொல்லார்' என்றார். மற்றும், சிலர் காரிகை கற்றாலும் கவிசொல்ல
முடியாமல் (இயற்கைக்கவிவளம் இல்லாமையால்) திகைக்கின்றனர். சிலர்
யாப்பிலக்கணங் கல்லாமலே கவி யெழுதத் தொடங்கிவிடுகின்றனர்.
இவ்விருதிறத்தவருட் பின்னவரை நோக்கியிரங்கினார் எனினும் ஆம்.
41.
குருடனுக்குக் குருடன் கோல் கொடுத்தல்
அருள்மிகுத்த ஆகமநூல் படித்தறியார்!
கேள்வியையும் அறியார்! முன்னே
இருவினையின் பயனறியார்! குருக்களென்றே
உபதேசம் எவர்க்கும் செய்வார்!
வரம்மிகுத்த தண்டலைநீள் நெறியாரே!
அவர்கிருபா மார்க்கம் எல்லாம்
குருடனுக்குக் குருடன்கோல் கொடுத்துவழி
காட்டிவரும் கொள்கை தானே.
|
(தொ-ரை.)
வரம்மிகுத்த
தண்டலை நீள் நெறியாரே! - நன்மைமிக்க
தண்டலை நீள்நெறி இறைவரே!, அருள் மிகுத்த ஆகமநூல் படித்து அறியார்
- (இறைவன்) அருள் மிகுந்த ஆகமநூல்களைக் கற்றறியாதவராகவும்,
கேள்வியையும் அறியார் - (பெரியோர் கூறும்) கேள்வியறிவில்லாதவராகவும்,
முன்னே இருவினையின் பயன் அறியார் - முன்செய்த நல்வினை
தீவினைகளின் பயனை அறியாதவராகவும்இருந்தும்), குருக்கள் என்றே
எவர்க்கும் உபதேசம்
|