(வி-ரை.)
கூற்று : உடலிலிருந்து உயிரைக் கூறுபடுத்துவோனுக்கு
ஆகுபெயர். ஊற்று - ஆதரவு. குடபால் - மேலைத்திசை. "காற்றுள்ளபோதே
தூற்றிக்கொள் : கரும்பு உள்ளபோதே ஆடிக் கொள்" என்பன
பழமொழிகள்.
43.
சொர்க்கத்தே போம்போதும் .....
வர்க்கத்தார் தமைவெறுத்த விருத்தருமாய்
மெய்ஞ்ஞான வடிவம் ஆனோர்
கற்கட்டா கியமடமும் காணியும் செம்
பொனுந்தேடும் கருமம் எல்லாம்
பொற்கொத்தாம் செந்நெல்வயல் தண்டலையா
ரே! சொன்னேன் பொன்னா டாகும்
சொர்க்கத்தே போம்போதும் கக்கத்தே
ராட்டினத்தைச் சுமந்த வாறே.
|
(தொ-ரை.)
பொன்கொத்துஆம் செந்நெல் வயல் தண்டலையாரே -
பொன்கொத்துப் போல விளையும் செந்நெல் நிறைந்த வயல்கள் சூழ்ந்த
தண்டலையிறைவரே!, வர்க்கத்தார் தமைவெறுத்த விருத்தருமாய் மெய்ஞ்ஞான
வடிவம் ஆனோர் - உறவினர்களை வெறுத்த முதியவராய் உண்மையறிவே
ஒரு வடிவம் எனக் காணப்படுவோர், கல்கட்டு ஆகிய மடமும் காணியும்
செம்பொனும் தேடும் கருமம் எல்லாம் - கல்லாற் கட்டப்பட்ட மடமும்
நிலமும் செம்பொன்னும் சேர்க்கிற வேலையெல்லாம், பொன் நாடு ஆகும்
சொர்க்கத்தே போம்போதும் கக்கத்தே ராட்டினத்தைச் சுமந்தஆறே -
பொன்னுலகாகிய சொர்க்கத்திற்குச் செல்லும் பொழுதும் இராட்டினத்தைக்
கக்கத்தில் இடுக்கிச் செல்லும் தன்மையை ஒக்கும்.
(வி-ரை.)
இராட்டினம்
: நூல் நூற்கும் கருவி. நூல் நூற்பதனாலே
கிடைக்கும் வருவாய் சிறிதாகும். அது வறுமையின் அடையாளம். அக்
கருவியைப் பொன்னாட்டிற்கும் சுமந்து செல்வது (வறுமையில் உள்ள பற்றைக்
காட்டுவதால்) நகைப்புக்கிடமானது. அவ்வாறே பேரின்ப வீட்டிற்குச் செல்லும்
நிலையிலுள்ள
|