போன்ற,
வாதாவி நாயகனை - வாதாவி விநாயகரை, தில்லை வாழும்
கார்கொண்ட கரிமுகனை - தில்லையில் எழுந்தருளிய மேகம் போன்ற
யானைமுகக் கடவுளை, விகடசக்ர கணபதியை - விகட சக்கர கணபதி
என்னும் திருப்பெயர் கொண்டருளியவரை, கருத்துள் வைப்பாம் - நினைவில்
அமைப்போம்.
(விளக்கவுரை)
தண்டலை யென்பது தண்டலை நீள்நெறியென்னுந்
திருப்பதியைக் குறிக்கும். அங்கு வீற்றிருக்கும் சிவபெருமான் திருப்பெயர்
நீள்நெறி நாதர்; நின்றறி நாதா்
எனவும் கூறுவர். அம்மையார் திருப்பெயர்
ஞானாம்பிகை. ‘தண்டலை நீணெறி'
இப்போது ‘தண்டலைச்சேரி'
எனப்படுகிறது. சோழ நாட்டில் திருத்தருப் பூண்டிப்
புகைவண்டி
நிலையத்துக்கு வடக்கே 21/2 கல் தொலைவில் உள்ளது. அரிவாள் தாய
நாயனார் இறைவனை வழிபட்ட இடம். அவர் திருப்பதியான கணமங்கலம்
கிழக்கே 1/2 கல்லில்
உள்ளது.
சதகம்
நூறு
செய்யுட்களால் உலகியலைத் தெரிவிக்கும் சிறு நூல். தண்டலை
யென்னும் திருப்பதியில் எழுந்தருளிய நீணெறி நாதரைத் தலைவராகக்
கொண்டு உலகியலாக வழங்கும் பழமொழிகளுக்கு விளக்கந் தரும் முறையில்
எழுதப்பட்டதால், இதற்குப் பழமொழி விளக்கம் என்னும் தண்டலையார்
சதகம் என்று பெயரிட்டுள்ளனர். எளிய இனிய நடையில்
ஆழ்ந்த
கருத்துக்களுடன் எழுதப் பெற்றுள்ளது.
நூலாசிரியர்
சிலர்
படிக்காசுப் புலவர் என்கின்றனர். சிலர் சாந்தலிங்கக் கவிராயர்
என்பர். வாதாவி விநாயகர் : திருப்புகலூரில் எழுந்தருளியவர்.
விகடசக்கர
கணபதி : காஞ்சியில் உள்ளவர். ஞானநாயகி,
தண்டலை நீள்நெறியில்
எழுந்தருளிய அம்மையார். நவகண்டம்
(உலகின்) ஒன்பது பிரிவுகள்.
அவை : கீழ்பால் விதேகம், மேல்பால் விதேகம், வடபால் விதேகம்,
தென்பால் விதேகம், வடபால் இரேபதம், தென்பால் இரேபதம்,
வடபால்
பரதம், தென்பால் பரதம், மத்திம கண்டம். தில்லை
: ஒருவகை மரம்.
|