பக்கம் எண் :

50

உண்மை யறிவினர்  உலகத்  தொடர்பாகிய  மடமும்  பொன்னும்  நிலமும்
தேடுவது  நகைத்தற்குரியதாகும்.  சொன்னேன் :  முன்னிலை

அசைச்சொல். ‘சொர்க்கத்தே போம்போதும் கக்கத்தே ராட்டினத்தைச்
சுமத்தல்'
பழமொழி.

 

          44. ‘ஏன் கருடா! சுகமா?'

ஆம்பிள்ளாய்! எனக்கொடுக்கும் பெரியோரை
      அடுத்தவர்கள் அவனிக் கெல்லாம்
நாம்பிள்ளாய்! அதிகம் என்பார்! நண்ணாரும்
      ஏவல்செய நாளும் வாழ்வார்
வான்பிள்ளாய்! எனும்மேனித் தண்டலையார்
      பூடணமாய் வளர்த்த நாகம்
ஏன் பிள்ளாய்! கருடா! நீசுகமோ? என்
      றுரைத்தவிதம் என்ன லாமே!

      (தொ-ரை.) பிள்ளாய்  ஆம்  எனக்  கொடுக்கும்  பெரியோரை
அடுத்தவர்கள் - இளைஞனே!  முடியும்  என்று  அளிக்கும்  சான்றோரைச்
சார்ந்தவர்கள், பிள்ளாய்! அவனிக்கெல்லாம் நாம் அதிகம் என்பர் -
இளைஞனே, உலகிலே  நாமே  சிறப்புடையேம்  என்று  நடந்துகொள்வர்!,
நண்ணாரும் ஏவல்செய நாளும் வாழ்வார் - பகைவரும் தொண்டியற்ற
எப்போதும் வாழ்ந்திருப்பர், பிள்ளாய் வான் எனும் மேனித் தண்டலையார்
பூடணமாய் வளர்த்த நாகம் - பிள்ளாய்! வானமே யெனும் எங்கும் நிறைந்த
மேனியை உடைய தண்டலையாரின் அணிகலனாக வளர்க்கப் பெற்ற பாம்பு,
ஏன் பிள்ளாய் கருடா நீ சுகமோ? என்று உரைத்தவிதம் என்னலாமே -
‘என்ன பிள்ளாய்! கருடனே? நீ நலந்தானோ?' என்று வினவிய வகையாக
அதனைக் கூறலாம்.

      (வி-ரை.) பிள்ளை - இளைஞன்.  ‘பிள்ளை'  என்பது  விளியேற்றாற்
‘பிள்ளாய்' என ஆகும். வானம்  போல  எங்கும்  நிறைந்தவர்  இறைவர்.
ஆகையால், ‘வான்  எனும் மேனித் தண்டலையார்' என்றார். கருடனைக்
கண்டாற் பாம்பு நடுங்குவது