46.
பூனை பிடித்தது விடுமோ?
பொலியவளம் பலதழைத்த தண்டலைநீள்
நெறிபாதம் போற்றி நாளும்
வலியவலம் செய்தறியீர்? மறம்செய்வீர்!
நமன்தூதர் வந்து கூடி
மெலியவரைந் திடுபொழுது கலக்கண்ணீர்`
உகுத்தாலும் விடுவ துண்டோ?
எலியழுது புலம்பிடினும் பூனைபிடித்
ததுவிடுமோ? என்செய் வீரே?
|
(தொ-ரை.)
பலவளம் பொலியத் தழைத்த தண்டலை நீள்நெறி பாதம்
நாளும் போற்றி - பலவகை வளங்களும் அழகுற மிகுந்த தண்டலை நீள்நெறி
இறைவர் திருவடிகளை எப்போதும் வாழ்த்தி, வலிய வலம்செய்து அறியீர் -
வலிமையுடன் வலம்வந்து அறியமாட்டீர்கள்! (ஆனால்), மறம் செய்வீர் -
தீவினை செய்வீர்கள்!, நமன் தூதர் வந்து கூடி மெலிய வரைந்திடு பொழுது -
எமனுடைய தூதர் வந்து சேர்ந்து (நீங்கள்) சோர்வுறும்படி (வாழ்நாளை)
எல்லையிட்டு (அழைக்கும்) பொழுது, கலக்கண்ணீர் உகுத்தாலும் விடுவது
உண்டோ - மிகுதியான கண்ணீர் விட்டாலும் விட்டுச் செல்வது நேருமோ?,
எலி அழுது புலம்பிடினும் பூனை பிடித்தது விடுமோ - எலி கதறியழுதாலும்
(அதனைப் பிடித்த) பூனை தன் பிடியை விடுமோ?, என் செய்வீர் -
(எமன்தூதர் அழைக்கும் போது) யாது செய்வீர்?
47.
‘நெற்றிவிழி காட்டுகினும் குற்றமே'
மற்றவரோ தமிழ்பாடி நாட்டவல்லார்?
நக்கீரர் வலிய ராகி
வெற்றிபுனை மீனாட்சி சுந்தரநா
யகரடுத்து விளம்பும் போதில்,
|
|