பக்கம் எண் :

55

சிறக்குந்தா யினும்அருள்வார் தண்டலையிற்
     சேராமல் தேசம் எல்லாம்
பறக்குங்கா கமதிருக்கும் கொம்பறியா
     தெனத்திரிந்து பயன்பெ றாரே!

      (தொ-ரை.) பிறக்கும்போது ஒரு பொருளும் கொடுவந்தது இல்லை -
பிறக்குங் காலத்தில் ஒரு பொருளையும் கொண்டு வந்தது இல்லை, உயிர்
பிரிந்து மண்மேல் இறக்கும் போதிலும் கொண்டு போவது இலை - உயிர்நீங்கி
உலகத்தில் சாகுங் காலத்திலும் எடுத்துச் செல்வதும் இல்லை, என்று வீணே
சும்மா இருந்து - என்று தீவினை செய்யாமல் இருந்து, சிறக்கும் தாயினும்
அருள்வார் தண்டலையிற் சேராமல் - சிறப்புடைய அன்னையினும்
அருள்புரியும் இறைவனின் தண்டலையை அடையாமல், பறக்கும் காகம் அது
இருக்கும் கொம்பு அறியாது என - பறக்கும் இயல்புடைய காகம் தான்
அமர்ந்து இருக்க ஒரு கொம்பையும் நிலையாகப் பெறாது என்பதைப்போல,
தேசம் எல்லாம் திரிந்து பயன் பெறார் - உலகெங்கும் சுற்றி யலைந்து (சிலர்)
நலம் பெறார் (ஆயினார்).

 

50. எய்தவர் இருக்க அம்பை நோவதேன்?

வைதிடினும் வாழ்த்திடினும் இன்பதுன்பம்
     வந்திடினும் வம்பு கோடி
செய்திடினும் தண்டலைநீள் நெறியார்தம்
     செயலென்றே தெளிவ தல்லால்
மெய்தவிர அவர்செய்தார் இவர்செய்தார்
     எனநாடி வெறுக்க லாமோ!
எய்தவர்தம் அருகிருக்க அம்பைநொந்த
     கருமம் என்ன? இயம்பு வீரே!

      (தொ-ரை.) வைதிடினும் வாழ்த்திடினும் - (பிறர்) இகழ்ந்தாலும்
புகழ்ந்தாலும், இன்பதுன்பம் வந்திடினும் -