இன்பம்
வரினும் துன்பம் வரினும், வம்புகோடி
செய்திடினும் -
கோடிக்கணக்காக வஞ்சகம் (பிறர்) செய்தாலும், தண்டலை நீள் நெறியார்
தம் செயல் (அவை) தண்டலைநீள் நெறியாரின் அருள், என்றே தெளிவது
அல்லால் - எனவே தெளிவடைவது அன்றி, மெய்தவிர - உண்மை நீங்க,
அவர் செய்தார் இவர் செய்தார் என நாடி வெறுக்கலாமோ - அவர் செய்தார்
இவர் செய்தார் என்று ஆராய்ந்து அவர்களை வெறுத்தல் நலமோ?, எய்தவர்
தம்
அருகு இருக்க அம்பை நொந்த கருமம் என்ன இயம்புவீர் - (அம்பை)
விடுத்தவர் தம் பக்கத்தில் இருக்கும்போது அம்பை நோவது என்ன காரியம்?
சொல்லுவீர்.
(வி-ரை.)
அவரவர் செய்வினையே அவரவர் நுகரும் பயனாக
முடிவதால், அப் பயனை யேற்கும் நெறியாளரான பிறரை நோவதால், ஏதும்
பயனில்லை; அதனை ஊட்டும் தண்டலையாரின் செயலென்றே கொள்ளல்
வேண்டும், ‘எய்தவன்
இருக்க அம்பை நோவது ஏன்?' என்பது பழமொழி.
51.
சாங்காலம் சங்கரா!
வாங்காலம் உண்டசெழுந் தண்டலையார்
அடிபோற்றி வணங்கி நாடிப்
போங்காலம் வருமுன்னே புண்ணியம்செய்
தரியகதி பொருந்து றாமல்
ஆங்காலம் உள்ளதெல்லாம் விபசாரம்
ஆகிஅறி வழிந்து வீணே
சாங்காலம் சங்கரா! சங்கரா!
எனின்வருமோ தருமந்தானே!
|
(தொ-ரை.)
வாங்கு ஆலம் உண்ட செழுந்தண்டலையார் அடிபோற்றி
வணங்கி நாடி - எடுத்த நஞ்சினைப் பருகிய, வளமிக்க தண்டலையாரின்
திருவடியைக் கும்பிட்டு ஆராய்ந்து, போங்காலம் வரும் முன்னே புண்ணியம்
செய்து அரியகதி பொருந்துறாமல் - இறக்குங்காலம் வருவதற்கு
|