முன்னே
நலம் புரிந்து சிறந்த நிலையை அடையாமல், ஆம்காலம் உள்ளது
எல்லாம் விபசாரம் ஆகி அறிவு அழிந்து - வாழும் நாள் உள்ளவரைக்கும்
தீய ஒழுக்கத்துடன் அறிவு கெட்டிருந்து; சாம்காலம் வீணே சங்கார சங்கரா
எனின் தருமம் வருமோ - இறக்கும்போது வீணாகச் சங்கரா! சங்கரா! என
வேண்டின் நன்னெறி கிடைத்திடுமோ?
(வி-ரை.)
வாழ்நாளில் ஒருவனுக்கு எதன்மேல் மிகுந்த விருப்பம்
உளதோ அதுவே இறுதியில் அவன் நினைவில் இருக்கும். ஆகையால்,
வாழ்நாள் முழுதும் இல்லாத சில நினைவு இறுதியில் வராது. மற்றும்
வாழ்நாள் முழுதும் தவறு செய்தவன் அதன் பயனை நுகர்ந்தே
ஆகவேண்டும். ஆதலாலும், சாங்காமல் சங்கரா! சங்கரா! என வேண்டிற்
பயன்பெறல் ஒண்ணாது. ‘சாங்காலத்திற்
சங்கரா என்றால் முடியுமோ'
என்பது பழமொழி.
52.
பெற்றதாய் பசித்திருக்க,,,
சுற்றமாய் நெருங்கியுள்ளார் தனையடைந்தார்
கற்றறிந்தார் துணைவே றில்லார்
உற்றவே தியர்பெரியோர்க் குதவியன்றிப்
பிறர்க்குதவும் உதவி யெல்லாம்
சொற்றநான் மறைபரவும் தண்டலையா
ரே! சொன்னேன்! சுமந்தே நொந்து
பெற்றதாய் பசித்திருக்கப் பிராமணபோ
சனம் நடத்தும் பெருமை தானே.
|
(தொ-ரை.)
சொற்ற நான்மறை பரவும் தண்டலையாரே - கூறப்பட்ட
நான்கு மறைகளும் போற்றும் தண்டலையாரே!, சுற்றமாய் நெருங்கியுள்ளார்
தனை அடைந்தார் கற்று அறிந்தார் துணைவேறு இல்லார் உற்ற வேதியர்
பெரியோர்க்கு உதவியன்றி - உறவினராக நெருங்கியவர்களும்
தன்னைச்
சார்ந்தவர்களும் படித்துணர்ந்தவர்களும் வேறு சார்பு இல்லாதவர்களும் வந்த
அந்தணர்களும் பெரியோர்களும் ஆகியவர்கட்கு உதவாமல், பிறர்க்கு
|