பக்கம் எண் :

58

உதவும் உதவியெல்லாம் - மற்றவர்களுக்கு உதவும் உதவிகள் யாவும், சுமந்தே
நொந்து பெற்ற  தாய் பசித்திருக்கப்  பிராமண  போசனம்  நடத்தும்
பெருமைதானே - சுமந்து வருந்தி ஈன்ற அன்னை பசியுடன் (வாடி) இருக்கும்
போது அந்தணர்களுக்கு உணவு படைக்கும் பெருமை யேயாகும
்.

      (வி-ரை.) "பெற்றதாய் பசியுடன் இருக்கப் பிராமண போசனமோ"
‘தன்னைப் பெற்ற தாயார் கிண்ணிப் பிச்சையெடுக்கிறார், பிள்ளை
கோதானம் செய்கிறான்'
என்பவை பழமொழிகள். சொன்னேன் : முன்னிலை
அசைச்சொல்.

 

     53. ‘நல்லமாட்டுக்கு ஓர் அடி!'

துன்மார்க்கர்க் காயிரந்தான் சொன்னாலும்
     மறந்துவிட்டுத் துடுக்கே செய்வார்!
சன்மார்க்கர்க் கொருவார்த்தை சொலும்அளவே
     மெய்யதனில் தழும்பாக் கொள்வார்
பன்மார்க்க மறைபுகழும் தண்டலையா
     ரே! சொன்னேன்! பதமே யான
நன்மாட்டுக் கோரடியாம்! நற்பெண்டிர்க்
     கொருவார்த்தை நடத்தை ஆமே.

      (தொ-ரை.) பல்மார்க்க மறைபுகழும் தண்டலையாரே - பல
நெறியினும் உள்ள மறைகள் போற்றும் தண்டலையாரே!, பதம் ஆன நல்
மாட்டுக்கு ஓர் அடிஆம் - பக்குவமான நல்ல மாட்டுக்கு ஓர் அடி
(திருந்துவதற்குப்) போதும், நல் பெண்டிர்க்கு ஒரு  வார்த்தை  நடத்தை ஆம்
- நல்ல  மாதர்க்கு  ஒரு மொழியாலேயே நன்னடை வரும், (அவ்வாறே)
சன்மார்க்கர்க்கு ஒரு வார்த்தை சொலும் அளவே மெய்யதனில் தழும்பாக்
கொள்ளார் - நன்னெறி யாளர்க்கு ஒரு சொல் சொன்ன அளவிலே உடம்பிலே
வடுவாக நினைப்பார்கள், துன்மார்க்கர்க்கு ஆயிரம் தான் சொன்னாலும்
மறந்துவிட்டுத் துடுக்கே செய்வார் - தீ