நெறியாளர்க்கு
ஆயிரம் அறிவு புகட்டினும் மறந்துபோய்த் தீவினையே
புரிவார்கள்.
(வி-ரை.)
‘நல்ல மாட்டுக்கு ஓரடி! நல்ல மனிதருக்கு ஒரு சொல்! '
என்பது பழமொழி.
54.
இரப்பார்க்கு வெண்சோறு பஞ்சமோ?
கரப்பார்க்கு நல்லகதி வருவதில்லை!
செங்கோலிற் கடல்சூழ் வையம்
புரப்பார்க்கு முடிவிலே சுவர்க்கமல்லால்
நரகமில்லை! பொய்யி தன்றால்!
உரப்பார்க்கு நலம்புரியும் தண்டலையா
ரே! சொன்னேன்! ஒருமை யாக
இரப்பார்க்கு வெண்சோறு பஞ்சமுண்டோ?
ஒருக்காலும் இல்லை தானே!
|
(தொ-ரை.)
உரப்பார்க்கு நலம்புரியும் தண்டலையாரே -
அறிவாளிகட்கு நன்மையருளும் தண்டலையாரே!, ஒருமையாக இரப்பார்க்கு
வெண்சோறு பஞ்சம் உண்டோ - ஒருதலையாகப் பிச்சை யெடுப்போர்க்கு
வெறுஞ் சோற்றுக்கும் பஞ்சமா?, ஒருக்காலும் இல்லை - எப்போதும் இராது,
(அதுபோல),கரப்பார்க்கு நல்ல கதி வருவது இல்லை - வஞ்சகர்க்கு நல்ல
நிலை கிடைப்பதில்லை, கடல்சூழ் வையம் செங்கோலின் புரப்பார்க்கு
முடிவிலே சுவர்க்கம் அல்லால் நரகம் இல்லை - கடலாற் சூழப்பட்ட
உலகத்திலே செங்கோலால் ஆட்சி செய்வார்க்கு இறுதியிலே சுவர்க்கமேயன்றி
நரகம் வராது, இது பொய் அன்று - இது பொய்யாகாது.
(வி-ரை.)
உரம் - அறிவு. உரம் பார் - அறிஞர் உலகம். (உரம்
+ பார்
= உரைப்பார்) ‘உரவார்க்கு' என்பது எதுகை நோக்கி ‘உரப்பார்க்கு' என
ஆயது என்றும் கூறலாம். (கரவு - மறைவு). உள்ளத்திலே ஒன்றும் வெளியிலே
ஒன்றுமாகக் கரப்போர் வஞ்சகர். ‘இரப்பாள்
சோற்றுக்கு வெண்சோறு
பஞ்சமா?' என்பது
பழமொழி.
|