56.
கெடுபவர்; கெடாதார்!
உள்ளவரைக் கெடுத்தோரும் உதவியற்று
வாழ்ந்தோரும் உறைபெற் றோரும்
தள்ளிவழக் குரைத்தோரும் சற்குருவைப்
பழித்தோரும் சாய்ந்தே போவார்!
பள்ளவயல் தண்டலையார் பத்தரடி
பணிந்தோரும் பாடி னோரும்
பிள்ளைகளைப் பெற்றோரும் பிச்சையிட்ட
நல்லோரும் பெருகு வாரே.
|
(தொ-ரை.)
பள்ளவயல் தண்டலையார் பத்தர் அடி பணிந்தோரும்
பாடினோரும் - பள்ளமான வயல்களையுடைய தண்டலையாரின் அடியவர்
அடிகளை வணங்கினவரும் பாடினவரும் பிள்ளைகளைப் பெற்றோரும்
-
குழந்தைகளைப் பெற்றவர்களும், பிச்சையிட்ட நல்லோரும் - இரந்தவர்க்குக்
கொடுத்தவர்களும், பெருகுவார் - (வாழ்வில்) மேம்படுவார்கள், உள்ளவரைக்
கெடுத்தோரும் - (செல்வம்) உடையவர்களுக்குத் தீங்கு செய்தவர்களும்,
உதவி அற்று வாழ்ந்தோரும் - (பிறர்) துணையை நாடாமல்
வாழ்கின்றவர்களும், உறைபெற்றோரும் - (பொய்வழக்குச்) செல்வம்
பெற்றவரும், வழக்கு தள்ளி உரைத்தோரும் - வழக்கிலே நடுநிலை நீங்கிக்
கூறியவர்களும், சற்குருவைப் பழித்தோரும் - நல்லாசிரியரை இகழ்ந்தவர்களும்,
சாய்ந்தே போவார் - கெட்டே போவார்கள்.
57.
அற்பருக்கு வாழ்வு வந்தால் ......
விற்பனர்க்கு வாழ்வுவந்தால் மிகவணங்கிக்
கண்ணோட்டம்
மிகவும் செய்வார்!
சொற்பருக்கு வாழ்வுவந்தால் கண்தெரியா
திறுமாந்து
துன்பம் செய்வார்!
|
|