பக்கம் எண் :

62

பற்பலர்க்கு வாழ்வுதரும் தண்டலையா
 
    ரே! சொன்னேன்! பண்பில் லாத
அற்பருக்கு வாழ்வுவந்தால் அர்த்தராத்
     திரி குடைமேல் ஆகும்தானே!

      (தொ-ரை.) பற்பலர்க்கு வாழ்வுதரும் தண்டலையாரே - பலதுறைப்
பட்டவர்களுக்கும் வாழ்வையருளும் தண்டலையாரே!, விற்பனர்க்கு வாழ்வு
வந்தால் மிக வணங்கி மிகவும் கண்ணோட்டம் செய்வார் - அறிவாளிகளுக்கு
வாழ்வு நேர்ந்தால்  மிகவும்  வணக்கமாக  யாரிடத்திலும்  நாகரிகமாக
நடந்துகொள்வர்; சொற்பருக்கு வாழ்வு வந்தால் கண் தெரியாது இறுமாந்து
துன்பம் செய்வார் - அறிவிலார்க்கு வாழ்வு நேரின் எதனையும் நோக்காமல்
செருக்குடன் யாவருக்கும் இடையூறு செய்வார்கள்; பண்பு இல்லாத அற்பருக்கு
வாழ்வுவந்தால் அர்த்தராத்திரி குடைமேல் ஆகும் - நற்குணம் இல்லாத
கீழ்மக்களுக்கு வாழ்வு கிடைத்தால் நள்ளிரவிலே தலைக்குமேற் குடை
இருக்கும்.

      (வி-ரை.) ஆகுந்தானே : தான், ஏ : அசைகள். கண்ணோட்டம் :
தம்மிடம் பழகியவர் செய்யும் தவறுகளைப் பொறுத்தல். அதுவே நாகரிகம்.
‘பெயக்கண்டும் நஞ்சு உண்டு அமைவர், நயத்தக்க, நாகரிகம் வேண்டு பவர்'
என்பர் திருவள்ளுவர்.
‘அற்பருக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியிற்
குடைபிடிப்பர்'
என்பது பழமொழி.

 

     58. பசுவினையே வதை செய்து ...

விசையம்மிகும் தண்டலையார் வளநாட்டில்
     ஒருத்தர் சொல்லை மெய்யாய் எண்ணி
வசைபெருக அநியாயம் செய்துபிறர்
     பொருளையெலாம் வலிய வாங்கித்
திசைபெருகும் கீர்த்தியென்றும் தன்மம் என்றும்
     தானம்என்றும் செய்வ தெல்லாம்
பசுவினையே வதைசெய்து செருப்பினைத்தா
     னங்கொடுக்கும் பண்பு தானே!