(தொ-ரை.)
விசையம்மிகும்
தண்டலையார் வளநாட்டில் ஒருத்தர்
சொல்லை மெய்யாய் எண்ணி - வெற்றியில் மேம்பட்ட தண்டலையாரின்
வளமிகுந்த நாட்டிலே ஒருவர் கூறுவதையே உண்மையென்று நம்பி,
வசைபெருகப் பிறர் பொருளை அநியாயம் செய்து வலிய வாங்கி - பழி
வளரும்படி மற்றோர் செல்வத்தை ஒழுங்கல்லாதன செய்து வற்புறுத்திக்
கவர்ந்து, திசைபெருகும் கீர்த்தியென்றும் தன்மம் என்றும் தானம் என்றும்
செய்வது எல்லாம் - எட்டுத்திக்கினும் வளரும் புகழ்ச் செயலெனவும், அறம்
எனவும், தானம் எனவும் புரிந்து வாழும் இச் செயல்கள் யாவும், பசுவினையே
வதைசெய்து செருப்பினைத் தானம் கொடுக்கும் பண்புதானே - ஆவினைக்
கொன்று (அதன் தோலால் தைக்கப்பட்ட) செருப்பைத் தானங் கொடுத்த
தன்மையே.
(வி-ரை.)
விசயம்
என்பது எதுகை நோக்கி விசையம் என ஆயிற்று.
விசயம் : விஜயம் என்ற வடசொல்லின் தற்பவம். ‘பசுவைக்
கொன்று
செருப்பைத் தானங்கொடுத்தல்' என்பது
பழமொழி.
59.
சிறியோர் பெரியோராகார்
சிறியவராம் முழுமூடர் துரைத்தனமாய்
உலகாளத் திறம்பெற் றாலும்
அறிவுடையார் தங்களைப்போற் சற்குணமும்
உடையோர்கள் ஆக மாட்டார்;
மறிதருமான் மழுவேந்தும் தண்டலையா
ரே! சொன்னேன்! வாரி வாரிக்
குறுணிமைதான் இட்டாலும் குறிவடிவம்
கண்ணாகிக் குணம்கொ டாதே!
|
(தொ-ரை.)
மறிதரும்
மான் மழு ஏந்தும் தண்டலையாரே - மறித்து
நோக்கும் மானையும் மழுவையும் கொண்டவரே? தண்டலையாரே!, வாரிவாரிக்
குறுணி மைதான் இட்
|